SKIP TO MAIN CONTENT

கொரோனா: இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் 800 பேர்!

Australian residents returning from India
Australian residents returning from India Source: AAP Image/David Mariuz

1 min read

Published

Updated


Skip to article content

கொரோனா தொற்றுக்காலத்தில் வெவ்வேறு நாடுகளில் நிர்க்கதியான சுமார் எண்ணூறு ஆஸ்திரேலியர்கள் இந்தவார இறுதியில் சிறப்பு விமானங்களில் அழைத்துவரப்படவுள்ளனர்.

எதிர்வரும் 28 ஆம் திகதி அடிலெய்ட் விமான  நிலையத்தில் வந்திறங்கும் இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படும் ஹோட்டல்களில் 14 நாட்களுக்கு மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவிலிருந்து ஒரு விமானமும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்களும் இந்தோனேஷியாவிலிருந்து ஒரு விமானமும்(defence force contingent) இவ்வாறு அடிலெய்ட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now