இந்தியா தெலங்கானாவில் , கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சம்சாபாத் சுங்கச் சாவடி அருகே குறித்த 27 வயது பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்டு குறித்த நால்வரும் சைபராபாத் பொலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சந்தேக நபர்கள் நால்வரையும் அழைத்துச்சென்றபோது அவர்கள் தப்பியோட முயன்றதாகவும் இதன்காரணமாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சைபராபாத் பொலீஸார் தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடப்படுகிறது.
