இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான விமானசேவையை Jetstar நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக வெளியான செய்தியை Jetstar நிறுவனம் உறுதிப்படுத்த மறுத்துள்ளது.
மலிவு விலையில் விமான பயணங்களை பல நாடுகளுக்கு வழங்கிவரும் Jetstar நிறுவனம் விரைவில் இலங்கைக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் David Holly-ஐ மேற்கோள் காட்டி டெய்லி நியூஸ் ஊடகம் செய்திவெளியிட்டிருந்தது.
எனினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனம்- பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவைகளை விஸ்தரிப்பது தொடர்பில் Jetstar நிறுவனம் மீளாய்வுகளை நடத்துவது வழக்கம் என்றபோதிலும் தற்போதைக்கு எந்தவிதமான அறிவிப்பும் தம்வசம் இல்லை- என்று தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை-மெல்பேர்ன் இடையிலான நேரடி விமானசேவையை SriLankan Airlines நிறுவனம் நடத்திவரும் அதேநேரம் இச்சேவை விரைவில் சிட்னிக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
