SKIP TO MAIN CONTENT

'இலங்கை குண்டுவெடிப்பு:பலி எண்ணிக்கை 140-ஆக உயர்வு-400 பேர் காயம்'

Sri Lankan Army soldiers secure the area around St. Anthony's Shrine after a blast in Colombo, Sri Lanka, Sunday, April 21, 2019.
Sri Lankan Army soldiers secure the area around St. Anthony's Shrine after a blast in Colombo, Sri Lanka, Sunday, April 21, 2019. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இலங்கையில் நட்சத்திரவிடுதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில்  பலியானோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ள  அதேநேரம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம் என செய்திகள் கூறுகின்றன.

ஈஸ்டர் தினமான இன்று ஏறக்குறைய ஒரேநேரத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டானையில் உள்ள தேவாலயம், கொழும்பிலுள்ள சினமன் க்ராண்ட், கிங்ஸ்பெரி, சங்ரிலா ஆகிய 3 நட்சத்திரவிடுதிகளிலும் இவ்வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்திலும் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது. 

மேலதிக விபரங்களை இன்று இரவு 8 மணிக்கு எமது ஒலிபரப்பில் எதிர்பாருங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now