- இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ள அதேநேரம் காயமடைந்த 500-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
- மொத்தமாக எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இவற்றில் ஆறு தாக்குதல்களை நடத்தியது தற்கொலை குண்டுதாரிகள் எனவும் 25 சந்தேகநபர்கள் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
- நேற்றைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காத்தான்குடி மற்றும் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தம்புள்ளவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
- இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் தியத்தலாவை பகுதியில் வைத்து விமானப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் பாணந்துறை பகுதியிலுள்ள வீடொன்றும் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
- வெடிகுண்டுகளை கொண்டு சென்றதாக கூறப்படும் சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
- குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தபோதிலும் சுதாகரிப்பதற்குள் இந்த தாக்குதல் நடந்தேறிவிட்டன எனவும் இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.
Share
