SKIP TO MAIN CONTENT

“இலவசமாக தங்கலாம், ஆனால் நெருக்கமாக பழக வேண்டும்”

“இலவசமாக தங்கலாம், ஆனால் நெருக்கமாக பழக வேண்டும்”

Gold Coast
Source: Flickr

2 min read

Published

By Raymond Selvaraj

Source: Domain


Skip to article content

 

“இலவசமாக தங்கலாம் – ஆனால் நெருக்கமாக பழக வேண்டும்” என்று விளம்பரங்கள் பெண்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் அழகு கொஞ்சும் கடற்கரை நகரம் Gold Coast நகரில் வீட்டு வாடகை தாறுமாறாக ஏறியிருப்பதால், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களால் அதிக வாடகை கொடுத்து வீடுகள் பெற இயலாத நிலை எழுந்துள்ளது. எனவே இதோ என்னிடம் ஒரு வழி இருக்கிறது என்று விளம்பரங்கள்    வ ரத்துவங்கியுள்ளன. இலவசமாக தங்குங்கள் ஆனால் என் ஆசைக்கு கொஞ்சம் இணங்கி நடக்கவேண்டும். பரவாயில்லையா? என்று  ‘take care of my more intimate needs’என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த விளம்பரங்கள் அழைப்புவிடுக்கின்றன.  

சர்வதேச மாணவிகள், தனியாக இருக்கும் பெண்கள்,  துணையின்றி வாழும் தாய்மார்கள் என்று இவர்களை இந்த விளம்பரங்கள் குறிவைக்கின்றன.  

“Free Rent. Female Only. Ideal for International Student”; “This is ideal for an international student, backpacker, single mum or someone who just wants to move to a new area,”  “In return you will help me around the house with cleaning up and keeping the place clean, as well as take care of my more intimate needs,”; “so you need to be open-minded and uninhibited.” இப்படியான விளம்பரங்கள் மூலம் விபச்சாரம் அல்லது உடலுறவுகொள்ள அழைப்பு விடுப்பது சட்டத்திற்கு புறம்பானதல்ல என்பதால் இப்படி விளம்பரப்படுத்தும் நபர்களை எதுவும் செய்ய இயலாது என்று கூறப்படுகிறது.

ஒருவரை கட்டாயப்படுத்தி அல்லது வன்முறையை உபயோகித்து உடலுறுவு கொண்டால்மட்டுமே அது குற்றம் என்பதால் இந்த செயல்களை எப்படி தடுப்பது கடினம் என்பதால், பொருளாதார ரீதியில் துன்பப்படும் இப்படியான பெண்களுக்கு அரசு உதவினால் பெண்களை பாலியல் ரீதியான கொடுமைக்குத் தள்ளும் நிலையை மாற்றலாம் என்று  Gold Coast நகரின் பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பின் இயக்குனர் Di Macleod கூறியுள்ளார்.     


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now