SKIP TO MAIN CONTENT

இரு குழந்தைகளையும் வெட்டிக்கொன்ற குற்றச்சாட்டில் இலங்கைத்தமிழர் பொலீஸாரால் கைது !

எச்சரிக்கை: இச்செய்தி சிலருக்கு மனச்சங்கடத்தை அளிக்கக்கூடும்.

facebook
Source: Facebook

2 min read

Published

Updated


Skip to article content

லண்டன்  Ilford-இல் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்திப்படுகொலை செய்தார் என்று கூறப்படும் இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தரை பொலீஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் நிதின் குமார்  என்ற இந்நபர் தற்போது பொலீஸ் காவலில் உள்ளார் என்று லண்டன் பொலீஸார் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் இவர் தனது 19 மாதங்களேயான மகளையும் மூன்று வயது மகனையும் கத்தியால் குத்திப்படுகொலை செய்தார் என்றும் குளியலறையிலிருந்து வெளியிலோடிவந்த மனைவி சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து நின்றபோது "அவர்கள் தன்னை கொல்லப்பார்த்தார்கள். அதுதான் ...." - என்று பிதற்றியபடி நின்றதாகவும் லண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் மகள் அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் மூன்று வயது மகன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்குதான் இறந்தார் என்றும் பொலீஸார் கூறியுள்ளனர்.

இந்த நபர் குறித்து இவரது மனைவி கூறும்போது கணவரில் இவ்வளவு காலமும் எந்த மாற்றத்தையும் கண்டதில்லை என்றும் அவர் எப்போதும் மென்மையாக பேசக்கூடிய நல்ல மனிதர் என்றும் கூறியுள்ளார்.

தான் குளியலறையில் நின்றுகொண்டிருந்தபோது குழந்தை வாந்தியெடுப்பதுபோல சத்தம் கேட்டு வெளியில் ஓடிவந்து பார்த்தபோது தனது கணவர் கத்தியோடு நின்றுகொண்டிருந்தார் என்றும் இரண்டு குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் கிடந்தன என்றும் கூறியுள்ள குறிப்பிட்ட நபரது மனைவி, "என்ன செய்திருக்கிறாய்" - என்று தான் பதறிப்போய் பிள்ளைகளிடம் ஓடிப்போக, "அவர்கள் தன்னை கொல்லப்பார்த்தார்கள்..." என்று ஏதோ பிதற்றினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கழுத்தில் வெட்டப்பட்டிருந்த மகனின் காயத்தை துணியால் மூடியபடி அவசரசேவையை அழைப்பதற்கு பதற்றமடைந்து நின்றுகொண்டிருந்தவேளையில், குளியலறைக்குள் சென்று தனது கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு வெளியில் ரத்தத்தோடு வந்து தனது கணவர் கட்டிலில் விழுந்தார் என்றும் அவர் லண்டன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலீஸார் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகிறார்கள்.

Readers seeking support can contact Lifeline crisis support on 13 11 14, Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at Beyond Blue.org.au and lifeline.org.au.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now