SKIP TO MAIN CONTENT

டென்னிஸ் வீரர் ஜொக்கோவிச்சின் விசா ரத்துச் செய்யப்படுவதாக குடிவரவு அமைச்சர் அறிவிப்பு!

Immigration Minister Alex Hawke (L) and tennis player Novak Djokovic (R).
Immigration Minister Alex Hawke (L) and tennis player Novak Djokovic (R). Source: SBS News

2 min read

Published

Updated


Skip to article content

டென்னிஸ் வீரர் ஜொக்கோவிச்சின் விசாவை ரத்துச் செய்வதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke அறிவித்துள்ளார்.

குடிவரவு அமைச்சராக தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார்.

செர்பிய டென்னிஸ் வீரர் நொவொக் ஜொக்கோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்துசெய்யப்பட்டமைக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்திருப்பதாக கூறிய ஜொக்கோவிச், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக மெல்பன் வந்திறங்கியபோது, அவரது ஆஸ்திரேலிய விசா ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த குடிவரவு அமைச்சு, அவரை ஹோட்டல் ஒன்றில் தடுத்துவைத்திருந்தது.

இந்நிலையில் ஜொக்கோவிச்சின் விசா ரத்துசெய்யப்பட்டமைக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த Federal Circuit  நீதிமன்றம், விமானநிலையத்தில்வைத்து குடிவரவுத் துறையினர் நடந்துகொண்ட முறை நியாயமற்றது என தீர்ப்பளித்ததுடன், ஜொக்கோவிச்சை உடனடியாக ஹோட்டலிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும் இச்சட்டப்போராட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட செலவையும் ஆஸ்திரேலிய அரசு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

நீதிமன்றின் தீர்ப்பு இவ்வாறு அமைந்திருந்த போதும் குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜொக்கோவிச்சின் விசாவை மீண்டும் ரத்துசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்த பின்னணியில் அமைச்சரின் அறிவிப்பு இன்று வெளியானது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now