SKIP TO MAIN CONTENT

N.S.W மாநிலத்தில் கடுமையாகும் வாகனம் ஓட்டும் விதிமுறைகள்

N.S.W மாநிலத்தில் அயர்வை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு விட்டு வாகனம் ஓட்ட தடை மற்றும் வாகனம் ஓட்டும் போது கைபேசியை பாவித்தால் அதிக demerit புள்ளிகள் இழப்பு.

Mobile Testing
Source: Nine Network

1 min read

Published

By Selvi



Skip to article content

போதை பொருட்கள் மட்டும் அல்ல பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கூட வாகனம் ஓட்டுவதை பாதிக்குமெனில் அவைகளையும் தடுக்கும் வகையில் N.S.W மாநிலத்தில் வாகனம் ஓட்டும் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

சளி மற்றும் காய்ச்சலுக்கு (Cold & Flu) எடுத்து கொள்ளப்படும் மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகளில் உள்ள Codeine மற்றும் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளும் வாகனம் ஓட்டுவதை பாதிக்கும் வகையில் மயக்கத்தை எற்படுத்தும் என்பதனால் N.S.W மாநிலத்தில் இவைகளை உட்கொண்டு வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது.

அதோடு வருகின்ற செப்டம்பர் முதல் வாகனம் ஓடும்போது கைபேசியை(mobile) பாவித்து பிடிப்பட்டடால் நான்கு demerit புள்ளிகளுக்கு பதில் ஐந்து புள்ளிகள் இழப்பீர்கள். இரட்டிப்பு demerit புள்ளிகள் நாளில் பிடிப்பட்டால் பத்து புள்ளிகள் போகும்


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now