SKIP TO MAIN CONTENT

இன்றுமுதல் நாட்டில் என்னவெல்லாம் நடைமுறைக்கு வருகின்றன?

இன்று ஜூலை ஒன்றாம் தேதி - இன்று முதல் நாட்டில் என்ன சட்டங்கள், திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

Changes
Source: FreeImages

2 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS Gujarati


Skip to article content

இன்று ஜூலை ஒன்றாம் தேதி நிதியாண்டு துவங்குகிறது. இன்று சில சேவைகளுக்கான கட்டணங்கள்  மாறுகின்றன; சில சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.  

Change in the point system - குடியேற தகுதிபெறும் புள்ளிகளில் மாற்றம்:

ஆஸ்திரேலியாவில் ஒருவர் புதிதாய் குடியேற 60 புள்ளிகள் எடுத்தால் போதுமானது என்று நேற்றுவரை இருந்தது. ஆனால் இன்று ஜூலை 1 முதல், இது 65 புள்ளிகளாக உயர்த்தப்படுகிறது.

change

ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் தமது மணத்துணை மற்றும் குடும்ப அங்கத்தவர்களை வரவழைப்பதற்கான விசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் முறைகளில் மாற்றங்கள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. 

இதன்படி இன்று முதல் மணத்துணையை வரவழைப்பதற்கான  Partner and Prospective Marriage subclass 820, 801, 309, 100 & 300 விண்ணப்பங்கள் அனைத்தும் ImmiAccount எனப்படும் இணையவழி கணக்கூடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும். நேரடியாகச் சென்றோ அல்லது பேப்பர் படிவங்கள் மூலமோ விண்ணப்பிக்க முடியாது.

Increase in minimum wage - குறைந்தபட்ச சம்பளம் உயர்கிறது:

இன்று ஜூலை 1 முதல் ஒருவருக்கு குறைந்தபட்சம் வாரக் கூலி $719.20 அளிக்கப்படவேண்டும். அதாவது ஒரு மணி நேர குறைந்தபட்ச கூலி $18.93 என்று உயர்த்தப்படுகிறது. 

இந்த மாற்றம் மூலம் சுமார் 23 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 இது குறித்த மேலதிக தகவலுக்கு:

July 2018 award rates are now available in Pay and Conditions Tool https://t.co/3iP6SUvrU8 pic.twitter.com/HC3BYQ6YT6

No more single-use plastic bags - ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை:

இது அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரவில்லை என்ற போதிலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை Queensland மற்றும் Western Australia மாநிலங்களில் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏற்கனவே இந்த தடை ACT எனப்படும் கன்பரா, தெற்கு ஆஸ்திரேலியா, Tasmania மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. Victoria மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், NSW மாநிலத்தில் Coles and Woolworths எனும் பெரும் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதற்கு நாள் குறித்து தடையை நடைமுறைக்கு கொண்டுவருகின்றன. குறிப்பாக Coles பல்பொருள் அங்காடிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்குவந்துள்ளது.

Image

Online shopping tax - இணையம் வழி பொருட்கள் வாங்குவதற்கு வரி செலுத்துவது நடைமுறைக்கு வருகிறது:

இணையம் வழி பொருட்கள் வாங்கும் போதும் இனி GST வரி செலுத்தவேண்டும். இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. $1,000 க்கும் அதிகமாக பொருள் வாங்கினால்தான் GST வரி செலுத்தவேண்டும் எனும் நடைமுறை இன்றுடன் மாறியுள்ளது. 

Amazon
Source: AP

New child care subsidy - புதிய Child Care Subsidy:

நாளை ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம்  நடைமுறைக்கு வருகிறது. இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy  அறிமுகமாகிறது. இதனூடாக வழங்கப்படும் நிதி நேரடியாக சிறுவர் பராமரிப்பு சேவை வழங்குநர்களைச் சென்றடையவுள்ளது.

இம்மாற்றத்தின் மூலம் சுமார் பத்து லட்சம் பேர் பயன்பெறுவர்.

For more information, visit https://t.co/OaqVC9WjMj to update your details and make the switch today #auspol #ozearlyed pic.twitter.com/XcpjtYbeLB

No glasses on the passport photo - பாஸ்போர்ட்டுக்கான விதிமுறையில் மாற்றம்:

இன்று  ஜுலை 1 முதல் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்/கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கென எடுக்கும் புகைப்படத்தில் prescription glasses-மூக்குக்கண்ணாடி அணிந்திருக்க முடியாது என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

For more information, visit https://t.co/ONwV8PvEwO #AusPassport pic.twitter.com/b2gOiFyKKG

Follow SBS Tamil on www.facebook.com/SBSTamil


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now