SKIP TO MAIN CONTENT

இன்று தமது கிறிஸ்மஸை கொண்டாடிய Coptic கிறிஸ்தவர்கள்!

 Pope Shenouda III, the head of Egypt's Coptic Orthodox Church, leads the Coptic Christmas mass held at the Abassiya Cathedral in Cairo.
Pope Shenouda III, the head of Egypt's Coptic Orthodox Church, leads the Coptic Christmas mass held at the Abassiya Cathedral in Cairo. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ரஷ்ய மற்றும் எகிப்திய Coptic கிறிஸ்தவர்கள் இன்று ஜனவரி ஏழாம் திகதி தமது கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடினார்கள்.

பிறிதொரு கிஸ்தவ மத கிளையினராக தங்களது சமய நிகழ்வுகளை கடைப்பிடிக்கின்ற இவர்கள் தங்களது கிறிஸ்மஸ் தினத்தை வித்தியாசமாக கொண்டாடுவது வழக்கம்.

43 நாட்கள் விரதமிருந்து ஜனவரி ஏழாம் திகதியிரவு தேவாலயத்துக்கு சென்று இவர்கள் தங்களது விரதத்தை முறித்துக்கொள்வர்.

ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள ஒரு லட்சம் Coptic கிறிஸ்தவர்கள் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை இன்று கொண்டாடினார்கள்.

சிட்னி தேவாலயத்தில் நூற்றுக்கணக்கில் கூடிய கிறிஸ்தவர்கள் நீண்ட நேரம் நடைபெறும் மதப்பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு தங்கள் விரதத்தை முறித்துக்கொண்டார்கள்.

இயேசு பிறந்த தினமாக கொண்டாடப்படும் இந்த கிறிஸ்மஸ் தினம் குழந்தைகளுடையது என்றும் இன்றைய தினத்தில் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி வயிறார உணவுகளை உண்டு களிப்பதும் இந்த தினத்தின் சிறப்பு என்றும் சிட்னி மதகுரு கூறினார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now