இந்தோனேசிய நாட்டின் Sulawesi தீவின் Palu எனுமிடத்தில் நேற்று நடந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 384 பேர் உயிர் இழந்தனர். குறைந்தது 540 பேர் படுகாயமடைந்தனர். 29 பேரை காணவில்லை.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த காரணத்தினால் மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்துள்ளனர். குறிப்பாக, மசூதி, மருத்துவமனை, விமான நிலையம், விடுதிகள், விற்பனை கூடங்கள் (shopping centre) என்று இந்த நகரின் முக்கிய இடங்கள் சேதமடைந்தன. சுமார் ஆறு லட்சம் மக்கள் வாழும் இந்த நகரம் சுற்றுலாதலங்களில் ஒன்றாகும்.
சுனாமி காரணமாக கடல் அலை சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் எழுந்துவந்து ஊரினுள்ளே புகுந்தது என்று கூறப்படுகிறது.
தொலைபேசி இணைப்புகள் மற்றும் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதால் நிவாரணப் பணிகள் தாமதமாவதாக அதிகாரிகள் கூறினர்.
