SKIP TO MAIN CONTENT

இந்திய அரசு வங்கி கிளை மெல்பேர்னில் திறக்கப்பட்டது!

SBI
Source: Supplied

1 min read

Published

Updated

Source: SBS Hindi


Skip to article content

இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியான SBI-பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மெல்பேர்னில் திறக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் கடந்த 1998ம் ஆண்டு Representative Office ஒன்றின் ஊடாக தனது வங்கி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த SBI, 2004 முதல் வங்கியாக மாறி செயற்பட ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது முதன்முறையாக மெல்பேர்னில் புதிய கிளை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படும் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன்படுத்தலாம்.

அந்தவகையில் இந்தியா முழுவதும் சுமார் 450 வாடிக்கையாளர்களைக் கொண்ட  பாரத ஸ்டேட் வங்கியின் மெல்பேர்ன் கிளை உத்தியோகப்பூர்வமாக கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கிளை திறக்கப்பட்டுள்ளமையானது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் என பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் தினேஸ் குமார் காரா தெரிவித்தார்.

குறித்த வங்கிக்கிளை ஊடாக deposits, remittances, trade finance solutions, syndicated loans உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கிளை ஆரம்பித்த முதல் இந்திய வங்கியாக, SBI விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now