SKIP TO MAIN CONTENT

இந்தியாவிலிருந்து மெல்பேர்னுக்கு 21 கோடி ரூபா போதைப்பொருள்! மடக்கிய பொலீஸார்!!

Delhi International Airport
Indira Gandhi International Airport, New Delhi Source: Delhi Airport Facebook

1 min read

Published


Skip to article content

இந்தியா, புதுடில்லியிருந்து சுமார் 21 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருளுடன் மெல்பேர்னுக்கு பயணமாகவிருந்த ஆஸ்திரேலிய நபர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர்.

புதுடில்லி இந்திராகாந்தி ஞாபகார்த்த விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு இந்திய நேரப்படி இரவு 11.20 மணியளவில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக புதுடில்லி பொலீஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி ஞாபகார்த்த சர்வதேச விமானநிலையத்தில் வந்து இறங்கிய குறிப்பிட்ட நபர் மெல்பேர்னுக்கு பயணமாகவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார் என்றும் விமானநிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்டதால் அதிகாரிகளால் அழைத்துச்சென்று சோதனையிடப்பட்டபோது அவரது கால்களில் மறைத்து வைத்திருந்த இந்த ஏழு கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now