இந்தியாவின் அன்னை தெரசா புனிதை ஆக்கப்படுகிறார்!

இந்தியாவின் அன்னை தெரசா புனிதை ஆக்கப்படுகிறார்!

Mother Teresa

Source: AAP

“சேரி மக்களின் புனிதை” என்று அழைக்கப்படும் அன்னை தெரசாவை வரும் செப்டம்பர் 4-ந் தேதி புனிதராக அறிவிக்க போப் இரண்டாம் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

 

கிறிஸ்தவ சமயத்தின் ஒரு பிரிவான கத்தோலிக்க சமயத்தில் ஒருவர் இறந்தால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் அதிகாரம் அச்சமயத்தின் தலைமை பீடமான வாடிகனில் வாழும் போப்பிடம் உள்ளது. அதற்கு முன்னர் ஒருவர் அருளாளர் என அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறுவதற்கு 2 அற்புதங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும். அவை அற்புதம் என்று கத்தோலிக்க திருச்சபை தலைமை பீடம் நம்பவேண்டும்.

மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்றில் புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்தார். அவர் தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்ததால் புற்றுநோய் குணமானதாகவும் கூறப்படுகிறது. இதை ஆய்வு செய்த பின் கடந்த 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இது புனிதர் பட்டத்துக்கு முந்தைய நிலையாகும்.

இதனைத் தொடர்ந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்ய அவர் முழு நலமடைந்தார். இந்த 2 அற்புதங்களை நிகழ்த்தியதால் அன்னை தெரசாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். எனவே வரும் செப்டம்பர் 4-ந் தேதி அன்னை தெரசாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிப்பார் என வாடிகன் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5-ந் தேதி அன்னை தெரசாவின் நினைவு நாளாகும்.

அன்னை தெரசாவின் வாழ்க்கைப் பின்னணி:

அல்பேனியா நாட்டில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி ஏழை குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரசா. அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா போஜாஸ்யூ. இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட்ட அவர் 1929-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்தவர்; தொழு நோயாளிகளுக்காக ப்ரேம் நிவாஸ் இல்லத்தை தொடங்கினார். அன்னை தெரசாவுக்கு 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அன்னை தெரசாவுக்கு 1980-ல் இந்தியாவின் அதி உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Mother Teresa
Source: Public Domain

Mother Teresa of Calcutta, a nun who dedicated her life to helping the poor, will be made a saint of the Roman Catholic Church at a ceremony on September 4, Pope Francis has announced.

Last December, he cleared the way for sainthood for the Nobel peace laureate, who died in 1997 at the age of 87 and was known as "saint of the gutters".

Teresa, who was born Agnese Gonxha Bojaxhiu of Albanian parents in 1910 in what was then part of the Ottoman Empire and is now Macedonia, became an international figure but was also accused of trying to convert people to Christianity.

Francis, who has made concern for the poor a major plank of his papacy, was keen to make Mother Teresa a saint during the Church's current Holy Year.

She founded the Missionaries of Charity with about a dozen nuns in the 1950s to help the poor on the streets of Calcutta, now known as Kolkata. The religious order spread throughout the world. She won the Nobel Peace Prize in 1979.

The Church defines saints as those believed to have been holy enough during their lives to now be in Heaven and can intercede with God to perform miracles. She has been credited in the church with two miracles, both involving the healing of sick people.

 


3 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now