SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய கொண்டைக்கடலைக்கு இந்தியாவில் வரி உயர்வு

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் கொண்டைக்கடலைக்கு 60 சதவீத வரிக்கட்டணத்தை வசூலிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்திருப்பதை விவசாய அமைச்சர் David Littleproud விமர்சித்துள்ளார்.

Chickpea dish
The Indian government has slapped a 60 per cent tariff on Australian chickpeas. (AAP) Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தைகள் நடத்தும் இவ்வேளையில், இந்திய அரசு இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி தருவதாக அமைச்சர் கூறினார்.

"இந்தியாவின் முடிவு எமாற்றத்தைத் தருகிறது என்பதை நாங்கள் வெளிப்படையாகவே சொல்கிறோம்," என்று விவசாய அமைச்சர் David Littleproud  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  மேலும் இது குறித்து இந்திய அமைச்சரிடம் தான் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த வரியை 30 சதவிகிதமாக உயர்த்திய இந்திய அரசு, பிப்ரவரி மாதத்தில் 40 சதவிகிதமாக மீண்டும் உயர்த்தியது.

நேபாளம், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் போன்ற மற்றைய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய கொண்டைக்கடலை ஏற்றுமதி செய்யப்படுவதால், ஆஸ்திரேலிய விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படவில்லை.

வரலாற்று ரீதியாக, ஆஸ்திரேலியப் பயிர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக இருந்திருக்கிறது.  கடந்த நிதியாண்டில் மட்டும் 1.66 பில்லியன் டாலர் பெறுமதியான கொண்டைக்கடலை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

 

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now