இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசு பல புதிய அறிவிப்புகளை விடுத்துள்ளது.
இதன்படி ராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புக்களின் உயர் அதிகாரிகளுக்கான விசாக்களை தவிர்த்து அனைத்து இந்திய விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
OCI- The Overseas Citizenship of India வைத்திருப்பவர்களும் ஏப்ரல் 15 2020 வரை அங்கு செல்ல முடியாது.
OCI என்பது வெளிநாட்டில் வாழும் இந்திய பின்னணி கொண்டவர்கள் விசா இன்றி இந்தியாவுக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட அனுமதியாகும்.
இந்நடைமுறைகள் நாளை மார்ச் 13ம் திகதி வெள்ளி நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
இதேவேளை மிகவும் அவசர தேவைகளின்நிமித்தம் இந்தியா செல்லவேண்டியுள்ளவர்கள் அருகிலுள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனா, ஈரான், தென்கொரியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் அனைவரும் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அறுபதைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
