இதனடிப்படையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பவுள்ளது.
அதிகளவிலான விமானங்கள் சேவையில் ஈடுபடத் தொடங்கும் என்பதால், பொதுமக்கள் பயணம் செய்வதற்கு பல தெரிவுகள் இருக்கும் எனவும், இந்தியாவுக்கான விமானக் கட்டணம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல், இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதுடன், அனைத்து விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் எட்டு மாதங்கள் கழித்து உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவும் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், அத்தியாவசிய தேவைகளுக்கென மாத்திரம் குறிப்பிட்ட சில விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதிலும், இந்திய அரசு travel bubble அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமான சேவைகளுக்கே அனுமதி வழங்கியிருந்தது.
Travel bubble அடிப்படையிலேயே பல நாடுகளுடனான சர்வதேச சேவைகள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்தப்பின்னணியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவை தொடங்கும் எனவும், அதன் பின்னர் travel bubble ஏற்பாடுகள் ரத்து செய்யப்படும் எனவும் இந்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
