SKIP TO MAIN CONTENT

எருமையுடன் ஓடியவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்குத் தயாரா?

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாச கவுடா என்பவர், எருமை பந்தயம் ஒன்றில் ஓடிய வேகம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Srinivas Gowda taking part in Kambala
Srinivas Gowda taking part in Kambala Source: Supplied Photos

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

கம்பாலா என்ற உள்ளூர் போட்டி ஒன்றில் எருமை மாடுகளுடன், 145 மீட்டர் தூரத்தை அவர் 13.52 வினாடிகளில் ஓடிக் கடந்தார் என்று சொல்லப்படுகிறது.  இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது வேகம், உலகில் அதி வேகமாக ஓடி சாதனை புரிந்த உசேன் ஃபோல்ட் (Usain Bolt) வேகத்தை விட அதிகம் என்று செய்திகள் வைரலாகின.

இந்த வேகம், 2009ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில், 9.55 வினாடி வேகத்தில் ஓடி முடித்த உசேன் ஃபோல்ட் சாதித்ததை வேகமானது என்பதால், அவரை ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு கொள்ள வைக்கும் நோக்குடன், இந்திய விளையாட்டு ஆணையம் சீனிவாஸ் கவுடாவை தொடர்பு கொண்டுள்ளது. 

இது குறித்து பலரும் tweet செய்து வருகிறார்கள்:

ஆனால் இந்த செய்திகள் பரவ ஆரம்பித்ததும், கம்பாலா போட்டிகளை நடத்தும் ஆணைக் குழு, தமது கணிப்பில் தவறு இருக்கலாம் என்று நழுவ ஆரம்பித்துள்ளது.

"மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை" என்று Kambala Academy தலைவர் பேராசிரியர் K Gunapala Kadamba BBC ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

"ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வேகத்தை அளவிட அதிக திறனுள்ள சிறந்த மின்னணு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  எம்மிடம் அவ்வாறான உபகரணங்கள் இல்லை" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“மக்கள் என்னை உசேன் ஃபோல்ட்டுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் ஒரு உலக சாம்பியன், நான் சதுப்பான நெல் வயலில் மட்டுமே ஓடிப் பழக்கமுள்ளவன்” என்று, ஊடகங்களுடன் பேசும் போது சீனிவாச கவுடா கூறியுள்ளார்.

தனியாக ஓடுவது வேறு, எருமைகளுடன், அவை இழுக்கும் வேகத்தில் ஓடுவது இன்னொன்று என்று சில ஆய்வாளர்கள் தமது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now