SKIP TO MAIN CONTENT

முதியவரைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இந்தியர் நீதிமன்றத்தில்!

சிட்னி நகரின் மேற்கில் அமைந்துள்ள தூங்கபீ (Toongabbie) என்ற இடத்தில், முதியவர் ஒருவரிடம் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இன்று நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

Indian man in court for robbing an elderly in Toongabbie
Indian man in court for robbing an elderly in Toongabbie Source: Vijay Singh

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 10, 2020) காலை 10 மணியளவில், 89 வயதான ஒருவர், தூங்கபீயில் உள்ள ஆரேலியா தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு வெளியே உள்ள ATMமில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளை, அவருக்குப் பின்னால் இருந்து பணப்பையைத் திருடியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

Cumberland பகுதி காவல் துறையினர், இது குறித்த விசாரணையை மேற்கொண்டதைத் தொடர்ந்து, தூங்கபீயில் உள்ள Portico Parade பூங்காவில் 25 வயது இளைஞன் நேற்று (பிப்ரவரி 12, புதன்கிழமை) காலை 11:15 மணியளவில் கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்டவர் Granville காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர், “ஒருவரிடமிருந்து திருடியதாக” குற்றம் சாட்டப்பட்டது.

இந்திய நாட்டவரான இவருக்கு இன்று (பிப்ரவரி 13, 2020 வியாழக்கிழமை) Fairfield உள்ளூர் நீதிமன்றத்தில் பிணை வழங்க மறுக்கப்பட்டது.

எமது நேயர் விஜய் சிங் அவர்கள் தனது வீட்டு கண்காணிப்பு நிழற்படக் கருவி பிப்ரவரி 10, 2020, காலை 10 மணியளவில் பதிவு செய்துள்ள காணொளியை காவல்துறையினருடன் பகிர்ந்து கொண்டார்.  அதனை எம்முடன் பகிர்ந்து கொண்ட விஜய் சிங் அவர்களுக்கு நன்றிகள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now