SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் தமிழ் உணவகத்தின் சமையலறையில் நாய் பூனைகளுக்கான இறைச்சி கண்டுபிடிப்பு!

wikimedia
Source: Wikimedia

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

Pet Meat எனப்படும் செல்லப்பிராணிகளுக்குக் கொடுப்பதற்காக பொதிகளில் அடைத்து விற்கப்படும் இறைச்சியை, சமையலறையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் உணவகம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரிலுள்ள தமிழ் உணவகம் ஒன்றில் சுகாதார துறையினர் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது சமையலறையிலிருந்து சுமார் 15 கிலோ ஆட்டிறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும், இறைச்சி அடைத்துவைக்கப்பட்ட பையின் மேல் 'Pet Meat - Not For Human Consumption' என்று தெளிவாக எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார துறையினர் சமையலறைக்குள் சென்றபோது அவ்வுணவகத்தின் சமையல்காரர் குறித்த இறைச்சியை வெட்டிச் சமைப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து பொதுமக்களுக்காக உணவு தயார் செய்யும் சமையலறையில் விலங்குகளுக்கான உணவுப்பொதி வைக்கப்பட்டிருந்த குற்றத்திற்காக கடந்த வாரம் குறித்த உணவகத்திற்கு சுமார் 14 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமது உணவகத்திற்கான இறைச்சியை விநியோகம் செய்பவர் Pet Meat என எழுதப்பட்ட பொதிகளில் இறைச்சியை அடைத்து விநியோகம் செய்திருந்ததாகவும், இத்தவறுக்கு அவரே காரணம் எனவும் தெரிவித்துள்ள உணவக உரிமையாளர், ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத சமையல்காரர் அந்தப் பொதியை சமையலறைக்குள் கொண்டுசென்றுவிட்டதாக கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now