Nikhil Bhatia (29) எனும் சுற்றுலா பயணி சிட்னியின் சுற்றுலா தளமான Darling Harbourல் உள்ள SeaLife Aquariumல், பெற்றோருடன் pramல் வந்திருந்த இரண்டு வயது ஆண் குழந்தையை முத்தமிட்டார் என்று பெற்றோர் புகார் அளித்தனர்.
Pramல் இருந்த குழந்தையை தலையில் தடவி கொடுத்து விட்டு கீழே குனிந்து இருதடவை அக்குழந்தையை அவர் முத்தமிட்டதாகவும், அதை பார்த்ததும் தான் அவரை தள்ளி விட்டதாவும் உடனே அவர் தன்னை மன்னிக்குமாறு கூறியதாவும் குழந்தையின் தந்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.
Bhatia அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 10 வயதிற்கு குறைவான குழந்தையை வேண்டுமென்றே பாலியல் ரீதியாக தொட்டார் என்று அவர்மீது குற்றம்சுமத்தப்பட்டது. தான் எதுவும் குற்றம் புரியவில்லை என்றும் கலாச்சார வேறுபாட்டினால் தனது செயல் தவறாக பார்க்கப்படுவதாகவும் Bhatia தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆயினும் குற்றம்சாட்டப்பட்டவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வலிமையான cctv காணொளி ஆதாரம் மற்றும் அக்குழந்தையின் பெற்றோரின் வலிமையான வாக்குமூலம் இருப்பதனால் தான் அவருக்கு பிணை வழங்க மறுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முன் ஆஸ்திரேலியாவை சுற்றி பார்க்க வந்த Bhatia பெப்ரவரி 22ஆம் தேதி இந்தியா திரும்ப இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தடுப்பு காவலில் உள்ள அவரின் வழக்கு பெப்ரவரி 4ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 16 ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
