இந்தியாவில் COVID தடுப்பு மருந்துகள் பற்றிய நிலைமை என்ன?

Close up of the coronavirus vaccine developed by AstraZeneca and Oxford University

Close up of the coronavirus vaccine developed by AstraZeneca and Oxford University Source: AAP

மேற்குலக நாடுகளைப் பொறுத்த அளவில் Pfizer, Moderna மற்றும் AstraZeneca நிறுவனத்தின் Covishield போன்ற Covid 19 தடுப்பு மருந்துகள் முழுமையான அங்கீகாரத்துடன் அல்லது emergency authorisation என்ற அவரசரகால அங்கீகாரத்துடன் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

ஆனால் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், குறிப்பாக, covid 19 இன் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு என்ற வகையில், அங்கு தடுப்பு மருந்துகள் பற்றிய நிலைமை என்ன?
Getty Images
Source: Getty Images
Covid 19 அல்லது corona virus இன் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் Covid 19 காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சமாகும்.

உலகில் மிகப்பெரிய மக்கள்தொகையைக்கொண்ட நாடுகளுள் ஒன்றான இந்தியா, தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நாடு என்ற வகையில், உலகில் முதலாவது இடத்தில் இருக்கிறது.
பல்வேறு தொற்றுநோய்களுக்கும் சர்வதேச ரீதியாகத் தேவைப்படும் தடுப்பு மருந்துகளுள் 60 சதவீதத்திற்கு அதிகமான தடுப்புமருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல, generic pharmaceutical drugs என்ற மருந்துவகைகளைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இதனால்தான் இந்தியாவை pharmacy of the world என்று அழைக்கிறார்கள். இதற்கு பிரதான காரணம் என்ன என்று பார்க்கிறபோது, தடுப்புமருந்து தயாரிப்பதிலும் generic மருந்துகள் தயாரிப்பதிலும் பெரிய லாபமில்லை என்பதால் அபிவிருத்தியடைந்த நாடுகளும் மேற்குலக நாடுகளும் பெரும் லாபமீட்டக்கூடிய விசேட மருந்துவகைகளைத் தயாரிப்பதிலேயே நாட்டம் கொண்டிருக்கின்றன என்பதுதான். அத்தோடு அவை செல்வந்த நாடுகளின் சந்தைகளைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன; அதிக லாபம் பெறப்படுகிறது.
Christian Fercher human guinea pig UQ Brisbane vaccine
Dr Christian Fercher at work in his lab at Queensland University. Source: Christian Fercher
மேற்குலக நாடுகள் தயாரிக்கும் covid 19 இற்கான தடுப்பு மருந்துகள் இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மலிவான விலையில், உடனடியாகக் கிடைக்கவாய்ப்பில்லை.

செல்வந்த நாடுகளின் purchasing power என்ற வாங்குந்திறன் அல்லது பொருளாதார வலிமை காரணமாக இந்தியா போன்ற நாடுகள் வரிசையில் பின்நோக்கித் தள்ளப்படுவதே இயல்பாகும். இதனால் இந்தியா போன்ற நாடுகள் தடுப்பு மருந்துகளைத் தாமே தயாரித்து தம்மக்களின் இன்னல்களைக் களைவது பிரதானமாகிறது.

இந்தியாவில் Serum Institute என்ற நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகில் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுள் முதலாவது இடத்தில் இருக்கும் நிறுவனமாகும்.
COVAX-19TM
COVAX-19 Source: COVAX
இந்த நிறுவனம் COVID-19 இற்கான தடுப்புமருந்தைத் தயாரிக்கிறது. இதைத் தவிர அரச நிறுவனமான Bharat Biotech என்ற நிறுவனம் Covaxin என்ற தடுப்புமருந்தை Indian Council for Medical Research என்ற அரச அமைப்புடன் இணைந்து பரிசோதித்து வருகிறது.

Serum Institute தயாரித்து வரும் தடுப்புமருந்து எந்த கட்டத்தில் இருக்கிறது?

Serum Institute, covid 19 இற்கான தடுப்புமருந்து பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த அதேவேளையில் புத்திசாலித்தனத்துடனும் துணிச்சலுடனும் ஒரு காரியம் செய்தது. அதுதான் AstraZeneca நிறுவனம் Oxford பல்கலைக்கழகத்துடன் இணைந்து பரீட்சித்து வந்த Covishield தடுப்புமருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கான அனுமதியை -license ஐப் பெற்றது.
Covishield மூன்றாம் கட்ட clinical trials நடந்துகொண்டிருந்த அதேவேளையில் Serum Institute ஏற்கனவே 4 கோடி Covidshield doses களை உற்பத்தி செய்துவிட்டது. அடுத்தமாதத்திற்குள் இது 10 கோடியாக அதிகரிக்கும் என்றும் அடுத்தவருடம் ஏப்ரல் மாதமளவில் இது 40 கோடியாக இருக்கும் என்ற வியூகத்தில் உற்பத்தி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறப்படாத நிலையில் கோடிக்கணக்கான ரூபா செலவில் இவ்வளவு பெருந்தொகையான doses களை உற்பத்தி செய்வதற்கு அசாத்திய துணிச்சல் மட்டுமல்ல அந்தத்துறையில் அனுபவமும் Oxford பல்கலைக்கழக ஆராய்ச்சி தொடர்பான நேரடி ஒருங்கிணைப்பும் தேவை.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Adar Poonawalla எடுத்த இந்த calculated risk இப்போது பலன் தந்திருக்கிறது. Covishield தடுப்புமருந்தை emergency authorisation அவசரகால அங்கீகாரத்தின் அடிப்படையில் பிரிட்டனில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. Serum Institute இதை அவசரகால அடிப்படையில் இந்தியாவில் பயன்படுத்த இந்திய மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருக்கிறது. இந்த அனுமதி நிச்சயம் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. Covishield phase 3 clinical trials என்ற ஆய்வுகள் இந்தியாவில் Serum Institute இன் மேற்பார்வையிலேயே நடைபெற்றன.
A heated discussion about the efficacy of the AstraZeneca vaccine, which is being prepared for the majority of Australians
A heated discussion about the efficacy of the AstraZeneca vaccine, which is being prepared for the majority of Australians Source: AAP
இதைத்தவிரவும் Serum Institute சுயமாக சில தடுப்புமருந்துகள் தொடர்பாகவும் பரிசோதனைகளைச் செய்து வருகிறது.

Covishield இந்தியாவில் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்குமா?

Pfizer இன் தடுப்புமருந்தோடு ஒப்பிடும் போது Covishield மிக மலிவானது. Pfizer இன் தடுப்புமருந்து ஒரு dose இன் விலை 37 அமெரிக்க டாலர்களாகும்.
ஆனால் AstraZeneca வின் Covishield இன் விலை dose ஒன்றுக்கு 3 தொடக்கம் 5 அமெரிக்க டாலர்கள் மட்டுமே என்பது இந்திய சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு பெருமளவில் ஏற்புடையதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
அத்தோடு சாதாரண குளிர்சாதனப்பெட்டியிலுள்ள வெப்பநிலையில் கொண்டு செல்லவும் பத்திரப்படுத்தவும் சாதரண room temperature என்ற அறையின் வெப்ப நிலையில் covidshield ஐப் பயன்படுத்தவும் முடியும் என்பவை சாதகமான விடயங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த தடுப்புமருந்து இந்த பிராந்தியத்தில் உள்ள பொருளாதரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள பல நாடுகளுக்கும் பெருமளவில் பயன்படும்.

Bharat Biotech என்ற இந்திய அரச நிறுவனத்தின் தடுப்புமருந்து பற்றிய தகவல்கள் என்ன?

Bharat Biotech இன் covaxin தடுப்பு மருந்துக்கான phase 1 and 2 clinical trials முதலாவது மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் முடிவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட ஆய்வுகள் இப்போது நடைபெற்றுவருகின்றன. மூன்றாம் கட்ட ஆய்வுகள் நம்பகமான மற்றும் உறுதியான தரவுகளை அளித்திருப்பது நம்பிக்கையளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இதை emergency authorisation என்ற அடிப்படையில் மக்களுக்கு வழங்கவும் விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.
Haryana Health Minister Anil Vij being administered a trial dose of Covaxin
Haryana Health Minister Anil Vij being administered a trial dose of Covaxin. Source: ANI
இந்த தடுப்புமருந்து தடுப்பு மருந்து பாரம்பரிய முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில், வைரஸின் RNA மற்றும் genetic code போன்றவற்றைப் பயன்படுத்துவதே இன்றைய நிலை என்றபோதும் Bharat Biotech இன் covaxin பழைய தொழில் நுட்பத்தையே பயன்படுத்துகிறது. வீரியம் இழக்கச்செய்யப்பட்ட covid 19 வைரஸை முழுமையாக உடலில் ஏற்றி நோயெதிர்ப்புச்சக்தியைத் தூண்டிவிடுவதே இந்த தொழில்நுட்பமாகும்.

Pfizer நிறுவனமும் தனது தடுப்புமருந்தை இந்தியாவில் விநியோகிக்க அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

ஆமாம். இந்தியாவில் Pfizer தடுப்புமருந்தின் விலை என்ன என்பது முடிவாகவில்லை. அத்தோடு Pfizer இன் தடுப்புமருந்து -70 C யில் எப்போதும் வைத்திருக்கப்பட வேண்டும் என்பது பெரிய சவாலாகும். இந்த விதமான சௌகர்யங்கள் மருந்துப் பொருட்களைப் பொறுத்த அளவில் அங்கு பெருமளவில் இல்லை. அனுமதி கிடைத்தாலும் அதை அங்கு விநியோகிப்பது இலேசல்ல.
vaccine, Pfizer, COVID-19, Philippines, Christmas
Source: ARIANA DREHSLER/AFP via Getty Images
ஆனால் 1.3 billion மக்களுக்கு அதாவது 130 கோடி மக்களுக்கு, தடுப்பு மருந்து வழங்குவது என்பது சாதாரண சவால் அல்ல. அதிகம் பாதிக்கப்படக்கூடிய critical mass of people என்ற இலேசாக நோய்தொற்றக்கூடிய மற்றும் குணப்படுத்துவதற்கு சிரமமான குழுக்களுக்கு முதலில் தடுப்புமருந்தை ஏற்றி, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக முதலில் 300 மில்லியன் பேருக்கு மருந்தை வழங்குவதே முதற் கட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த இலக்கையடைய ஒரு தடுப்புமருந்தைமாத்திரம் நம்பியிருக்க முடியாது என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Moderna நிறுவனத்தின் தடுப்புமருந்து, மற்றும் ரஷ்யாவின் Sputnik 5 தடுப்புமருந்து என்பனவும் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வில் இருப்பதாக இந்திய மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share

Published

Updated

By R.Sathiyanathan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand