Ingenuity என்று பேர் சூட்டப்பட்டுள்ள இந்த helicopter-ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மேலே எழுந்து, அரை நிமிட நேரம் அதாவது 30 வினாடிகள் பறந்தது.
இந்த helicopter கடந்த பெப்ரவரி மாதம் Perseverance rover என்ற ஊர்தி செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் இறக்கப்பட்டபோது அதனுடன் சேர்த்து இறக்கப்பட்டது.
செவ்வாய்க்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க க் கூடுமா என்ற ஆராய்ச்சியின் நிமித்தமாகவே இந்த Perseverance rover அங்கு தரை இறக்கப்பட்டது.
இந்த helicopter சுமார் 2 கிலோ கிராம் எடையுள்ளது. ஏறக்குறைய ஒரு drone ஐ ஒத்தது என்றாலும் helicopter ஐப்போன்று செயல்படுவது. இதனைச்சுமந்து சென்ற perseverance rover என்ற ஊர்தி, இந்த helicopter ஐ Wright Brothers Field என்று புதிதாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள செவ்வாயின் தரைப்பகுதியில் இறக்கிவிட்டு, 100 மீட்டர் தூரம் நகர்ந்துகொண்டது.

இந்த helicopter கடந்த செவ்வாயன்று, செவ்வாய்க்கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மூன்று மீட்டர் உயரம் எழுந்து 30 விநாடிகள் பறந்தது என்பது விண்வெளி ஆராய்ச்சியைப்பொறுத்தளவில் பிரதான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. பறந்த இந்த நிகழ்வை perseverance rover video படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த helicopter ஐ வடிவமைப்பதற்கு NASA வின் Jet Propulsion Laboratory என்ற ஆய்வு கூடத்திற்கு ஆறுவருடங்கள் எடுத்திருக்கின்றன என்பதிலிருந்தே இந்த சவால் எப்படிப்பட்ட ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த first flight என்ற முதலாவது நிகழ்வைத்தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் மீண்டும் இந்த helicopter 4 அல்லது 5 தடவைகள் பறக்கும் என்றும் ஒவ்வொரு முறையும், இது பறக்கும் உயரம் மற்றும் தூரம் என்பன அதிகரிக்கப்படும் என்றும் NASA அறிவித்திருக்கிறது.
Wright சகோதரர்கள் முதன்முதலாக பூமியின் தரையிலிருந்து விமானத்தை எழுந்து பறக்கச்செய்ததற்கு ஒப்பான விஞ்ஞான சாதனை என்று இது பார்கப்படுவதால் இந்த helicopter புறப்பட்ட இடப்பரப்பிற்கு Wright Brothers Field என்று பேர் சூட்டியிருக்கிறார்கள். இந்த நிகழ்விற்கும் அதே First flight என்ற அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. Wright brothers இன் first flight இற்கு மரியாதை செலுத்தும் விதமாக 1903 இல் Wright சகோதரர்கள் பறந்த விமானத்தின் சிறகிலிருந்து எடுக்கப்பட்ட மிகச்சிறிய பகுதியொன்று, இந்த helicopter இல் பொருத்தப்பட்டுள்ள solar panel மீது இணக்கப்பட்டிருக்கிறது.
Helicopter கள் மற்றும் Drone கள் பூமியில் பறப்பது சாதாரண நிகழ்வு. செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பில் பறப்பது ஏன் சாதனை என்ற அளவில் பார்க்கப்படுகிறது.
பூமியில் நம்மைச்சுற்றி atmosphere என்ற வளிமண்டலம் இருக்கிறது. Helicopter ஒன்று பறப்பதற்கு இந்த வளிமண்டலம் தேவை. Helicopter இன் மேற்பகுதியில் உள்ள blades அல்லது rotors என்ற விசிறி சுழன்று lift என்ற மேலே எழும் force ஐக்கொடுப்பதற்கு இந்த வளிமண்டலம் தேவை. செவ்வாய்க்கிரகத்திலும் இந்த வளிமண்டலம் உண்டு என்ற போதும் இது பூமியின் வளிமண்டலத்துடன் ஒப்பிடும் போது 100 மடங்கு செறிவு குறைவானது. ஆகவே இந்த helicopter ஐ பூமியில் பரிசோதிக்க காற்றழுத்தம் மிக மிகக் குறைவான சூழல் தேவை.
அதே போல gravity என்ற புவியீர்ப்பு விசை, பூமியோடு ஒப்பிடுகையில் அங்கு மிகக் குறைவு. இது பூமியின் விசையில் மூன்றிலொரு பங்காகும். Ingenuity என்ற helicopter இன் மற்றொரு சாதனை என்று பார்க்கப்படுவது, பூமியல்லாத மற்றொரு கிரகத்தின் தரைப்பரப்பிலிருந்து மேலே எழுந்து பறந்த முதலாவது பறக்கும் சாதனம் என்பதுதான்.
இந்த சவால்களை எதிர்நோக்க இந்த helicopter வடிவமைப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன?
செவ்வாயிலுள்ள அடர்த்திமிக க் குறைவான வளிமண்டலத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக சாதாரண helicopter களில் உள்ள rotors என்ற விசிறியின் சுழலும் வேகம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. சாதாரண helicopter rotor கள் நிமிடத்திற்கு 400 தொடக்கம் 500 தடவைகள் சுழலும். ஆனால் ingenuity யின் rotor வேகம் நிமிடத்திற்கு 2400 தடவையாக அதிகரிக்கப்பட்டது. இதன் rotor கள் carbon fibre என்ற மூலப்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

அடுத்ததாக இந்த helicopter இன் size-அளவைவிட பலமடங்கு நீளமான blade கள் விசிறியில் பொருத்தப்பட்டன. சாதாரன tissue box அளவினதான body ஐக்கொண்ட இந்த helicopter இற்கு 1.2 மீட்டர் நீளமான blade கள் பொருத்தப்பட்டன.
அடுத்த பெருஞ்சவாலாகப் பார்க்கப்பட்டது, பூமியிலிருந்து இயக்கும் சமிக்ஞைகளை helicopter இற்கு அனுப்புவது. பூமியிலுள்ள கணிணி ஒன்று அனுப்பும் கட்டளைகள் முதலில் செய்மதிக்குச்சென்று அந்த கட்டளைகள் செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தில் உலா வந்து கொண்டிருக்கும் Mars Reconnaissance Orbiter என்ற கலத்திற்குப் போய்சேரவேண்டும். அங்கிருந்து அது Perseverance ஊர்திக்குப்போய் அதிலிருந்து helicopter ஐச்சென்றடையவேண்டும். இந்த கட்டளை சென்றடைய பல மணித்தியாலங்கள் எடுக்கும். இந்த சவாலைச்சமாளிக்க புதிய விஞ்ஞான தொழில்நுட்பங்கள் பெருமளவில் இந்த திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இனி இதன் அடுத்த கட்டம் என்ன?
செவ்வாயின் மேற்பரப்பில, 300 மீட்டர் வரையான தூரம் பறக்கக் கூடிய ஒரு சாதனத்தைப் பரீட்சிப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்ற போதும் இதன்மூலமாக்க் கிடைக்கக் கூடிய தரவுகளை அடிப்படையாக வைத்து இதைவிட அதிகசெயல்திறனும் பயன்பாடும் உள்ள பறக்கும் சாதனங்களை வடிவமைத்து செவ்வாய்க்கிரகத்தையும் ஏனைய கிரகங்களையும் ஆய்வு செய்வதே பிரதான நோக்கமாகப்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிரகத்தைப்பொறுத்த அளவில் மிகச்சக்திவாய்ந்த helicopter அல்லது drone பயன்படுத்தக் கூடிய நிலையில், அங்கு நிலைகொண்டுள்ள Perseverance rover என்ற ஊர்தியின் பயணப்பாதைகளை திட்டவட்டமாக நிர்ணயிக்கமுடியும். அதேபோல அங்கு தண்ணீர் இருக்கிறதா, உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சிக்கும் இவை பெருமளவில் உதவி செய்யும்.
2035 ஆம் ஆண்டில் மனிதன் செவ்வாய்க்கிரகத்தில் அடியெடுத்து வைப்பான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிகழும் போது, அங்கு அவர்கள் பயன்படுத்த இவ்வாறான helicopter கள் தேவைப்படும் என்றும் தரையில் அவர்கள் எதிர்நோக்கக்கூடிய தடைகளை அல்லது மனிதருக்குப் பாதுகாப்பில்லாத சூழல்களை மேலே பறந்து சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டபின், தரையில் அவர்கள் இறங்க முடியும் என்பதும் நீண்டகால நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
