நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாலை 12.01 மணி வரை அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்த, NSW காவல்துறை மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. விதிகளை மீறுவோருக்கு, தற்போது 5,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
சிட்னி பெரு நகரில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மற்றும் உடற்பயிற்சி செய்ய என்ற காரணங்கள் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டும், தங்கள் உள்ளூராட்சிப் பகுதிக்குள் அல்லது வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டருக்குள் பயணிக்க முடியும். தொற்று அதிகமாகப் பரவியுள்ள உள்ளூராட்சிப் பகுதிகள் மற்றும் NSW மாநிலத்தின் பிராந்திய பகுதிகளுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.
உங்கள் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் எல்லை எங்கே இருக்கிறது? கண்டுபிடிக்க கீழே உள்ள எங்கள் (interactive) வரைபடத்திற்குச் செல்லவும்.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநில அரசுகளின் கோவிட் -19 குறித்த ஊடகவியலாளர் சந்திப்புகளின் நேரடி மொழிபெயர்ப்புகளை பல்வேறு மொழிகளில் SBS வழங்குகிறது. மேலதிக தகவலுக்கு இங்கே பார்க்கவும். கோவிட்-19 குறித்த செய்திகளைத் தமிழ் மொழியில் அறிந்து கொள்ள https://www.sbs.com.au/language/tamil/coronavirus-updates என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும்.
Interactive by Ken Macleod, artwork by Jono Delbridge.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.