SKIP TO MAIN CONTENT

COVID தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழுடன் வரும் வெளிநாட்டவர்களை அனுமதிக்கலாமா? அரசு ஆலோசனை

Close up of the coronavirus vaccine developed by AstraZeneca and Oxford University V2A (AAP)
Close up of the coronavirus vaccine developed by AstraZeneca and Oxford University V2A Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

COVID-19 தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதற்குரிய சான்றிதழைக் காண்பித்து உறுதிப்படுத்தினால் அவர்களை மருத்துவ ரீதியான 14 நாள் தனிமைப்படுத்தலின்றி ஆஸ்திரேலியாவுக்குள் அனுதிப்பது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தடுப்பூசியை ஒரு மருத்துவ சலுகையாக ஏற்றுக்கொள்ளாமல், நாட்டுக்குள் வருபவர்கள் அனைவரையும் மருத்துவ ரீதியாக தனிமைப்படுத்தி சோதனை செய்வதை தொடர் படிமுறையாக செயற்படுத்துவதே நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் என்று சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியர்களுக்கான COVID-19 தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் அனைவருக்கும் வழங்கப்படுவதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொண்டுவருகிறது.

நோய்நிலைமைகள் காரணமாக தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளவர்களைத் தவிர்த்து, நாட்டிலுள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்பது ஆஸ்திரேலிய அரசின் தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.

இந்த மருத்துவ ரீதியான படிமுறைகளை கடைப்பிடிக்கும்போது, வெளிநாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது, இன்னும் நாடு திரும்பாத ஆஸ்திரேலியர்களை எவ்வாறு திரும்பி வருவதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான பொறிமுறைகளை அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த ஆலோசனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய சுகாதார துறையினர், நாட்டுக்குள் வருபவர்கள் யாரென்றாலும் அவர்களுக்கு 14 நாள் மருத்துவ ரீதியான தனிமைப்படுத்தல் என்ற பொறிமுறை இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ச்சியாக பேணப்படவேண்டிய ஒன்று. அதுவே நாட்டின் பாதுகாப்புக்கு உறுதியானது என்று வலியுறுத்தியுள்ளனர்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now