SKIP TO MAIN CONTENT

இன்று உலக தாய் மொழி நாள் 2018

ஆங்கிலம் 110 நாடுகளிலும், தமிழ் 6 நாடுகளிலும் பெருவாரியான மக்களின் தாய்மொழியாக அமைந்துள்ளது.

International Mother Language Day
Source: UNESCO

1 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

இன்றைய உலகில் 7,102 மொழிகள் பேசப்படுவதாக மொழியியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.  இந்த மொழிகளில், இருபத்தி மூன்று மொழிகள் ஒவ்வொன்றும் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தாய் மொழியாக உள்ளது.  மொத்தமாக 4.1 பில்லியன் மக்கள் இந்த 23 மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள்.  

ஆங்கிலம் 110 நாடுகளிலும், தமிழ் 6 நாடுகளிலும் பெருவாரியான மக்களின் தாய்மொழியாக அமைந்துள்ளது.  அதிக எண்ணிக்கையான தாய்மொழிகளைக் கொண்ட நாடு பப்புவா நியூ கினி (PNG).  அங்கே 839 தாய்மொழிகள் பேசப்படுகின்றன.  இந்தியாவில் 454 மொழிகள், இந்தோனேசியாவில் 707 மொழிகள் இப்பொழுதும் முதல் மொழியாகப் பேசப்படுகின்றன.

இந்தத் தரவுகளையும் தாய்மொழி குறித்த வேறு சில தரவுகளையும் கொண்டு Alberto Lucas López என்ற Infographic journalist / artist 2005ம் ஆண்டு உருவாக்கிய செய்திச்சித்திரம் ஒவ்வொரு மொழியையும் கருப்பு எல்லைகளுக்குள் பிரதிநிதித்துவம் செய்து எத்தனை பேர் அதனைப் பேசுகிறார்கள் என்ற (மில்லியன் கணக்கான மக்களின்) எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளது.  பல நாடுகளில் மொழிகள் எப்படி வேரூன்றியுள்ளன என்பதை நாடுகளின் நிறம் சுட்டிக் காட்டுகிறது.

A World of Language - 1/3
courtesy Infographic journalist / artist, Alberto Lucas López Source: SBS Tamil
A World of Language - 2/3
courtesy Infographic journalist / artist, Alberto Lucas López Source: SBS Tamil
A World of Language - 3/3
courtesy Infographic journalist / artist, Alberto Lucas López Source: SBS Tamil

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now