இந்தியப் பின்னணி கொண்ட 3 மாணவர்களும், கொலம்பிய பின்னணிகொண்ட 3 மாணவர்களுமே குறித்த வழக்குகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், தமக்குச் சேரவேண்டிய சம்பள நிலுவையையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
Sub-contractor ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்த மூன்று கொலம்பிய மாணவர்களும், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக மையங்களைத் துப்புரவு செய்யும் பணியை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு மணித்தியாலத்திற்கு 20 டொலர்கள் சம்பளம் தருவதாக குறித்த sub-contractor ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் 522 மணித்தியாலங்கள் வேலைசெய்தபோதிலும் 740 டொலர்கள் மாத்திரமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பில் கேட்டபோது அவர் தம்மை மிரட்டியதாகவும், வரி செலுத்தாமல் வேலைசெய்ததாக குடிவரவுத் திணைக்களத்திடம் முறையிட்டு தமது விசாவை ரத்துசெய்யப்போவதாக தெரிவித்தார் எனவும் குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று காஜல், வினித் மற்றும் வைஷ்ணவி ஆகிய மூன்று இந்திய மாணவர்களும், Hospitality துறையில் பணிபுரிந்ததாகவும், தங்களது முதலாளியும் உரியமுறையில் சம்பளத்தைக் கொடுக்காமல் தம்மை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.
Gumtree இணையத்தில் வெளியான விளம்பரத்தின் மூலமே குறித்த வேலையில் தாம் இணைந்துகொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து JobWatch என்ற அமைப்பின் ஊடாக தமது முதலாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கையை மேற்கொண்ட இந்த 6 மாணவர்களும் தமது வழக்கில் வெற்றிபெற்றுள்ளதுடன், சுமார் 50,000 டொலர்கள் சம்பள நிலுவையையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
JobWatch என்பது சர்வதேச மாணவர்களுக்கு சட்ட உதவிகளை இலவசமாக வழங்கும் அமைப்பு எனவும், பணிச்சுரண்டலுக்கு உள்ளாகும் மாணவர்கள் பயமேதுமின்றி சட்ட உதவியை நாடவேண்டும் எனவும் குறித்த 6 மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
