கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் விமானப்போக்குவரத்து மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை நாமறிந்த செய்தி.
இவ்விமானப்போக்குவரத்து முழுவதுமாக இயல்புநிலைக்குத் திரும்ப ஆகக்குறைந்தது 2023ம் ஆண்டு வரை ஆகலாம் என International Air Transport Association (IATA) தெரிவித்துள்ளது.
சர்வதேச விமானசேவைகள் கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்கப்பட்டாலும், அவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டைவிட 24 வீதம் குறைவாகவே இருக்கும் என IATA குறிப்பிட்டுள்ளது.
அடுத்த வருடம்முதல் உலகளாவிய போக்குவரத்து துறை கொரோனா பரவல் பாதிப்பிலிருந்து மீளத்தொடங்கிவிடும் என எதிர்வுகூறப்பட்டாலும், 2023ம் ஆண்டு வரைக்குமாவது இதன் தாக்கம் உணரப்படும் என IATA நிர்வாகி Alexandre de Juniac சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இரண்டாம்கட்டமாக கொரோனா பரவல் உலகளாவிய ரீதியில் பரவுமானால் சர்வதேச விமானப்போக்குவரத்தின் எதிர்காலம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுஒருபுறமிருக்க விமானப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் IATA நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 58 வீதமானோர் தாம் உள்நாட்டிற்குள்ளேயே பயணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
