SKIP TO MAIN CONTENT

ஈரான் சிறையிலிருந்து ஆஸ்திரேலிய தம்பதியினர் விடுதலை!

Mark Firkin and Jolie King Released by Iranian Government
Mark Firkin and Jolie King Released by Iranian Government Source: Supplied Blogger

1 min read

Published

Updated


Skip to article content

ஈரானில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தபோது அந்நாட்டு இராணுவத்தளத்திற்கு மேல் - தடைசெய்யப்பட்ட வான் பரப்பில் drone-ஐ பறக்கவிட்டு படம்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய தம்பதியினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானின் ஈவான் சிறைச்சாலையில் மூன்று மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்த தம்பதியினர் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களும் மீளப் பெறப்பட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய திரும்பிய   இவர்கள், தங்கள் சொந்த இடமான பேர்த்திற்கு செல்வதற்கு முன்னர் கருத்து தெரிவிக்கும்போது - தங்களது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய தம்பதியினரின் விடுதலைக்காக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் Antony Albanese வாழ்த்து தெரிவித்தார்.

ஈரான்- ஆஸ்திரேலியா இடையேயான கைதி பரிமாற்ற நிபந்தனைஅடிப்படையில் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, ஈரானில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கபட்டுள்ள மெல்பேர்ன் பல்கலைக்கழக விரிவுரையாளரின் விடுதலை குறித்து தாங்கள் தொடர்ந்து பேச்சு நடத்திவருவதாகவும் அவரது கைதும் தடுத்துவைத்திருக்கும் காரணமும் சிக்கலாக உள்ளது என்றும் ஆஸ்திரேலிய  வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now