SKIP TO MAIN CONTENT

இரு தலைவர்களினதும் பகிரங்க மோதல்: இரண்டாவது தடவையும் Shorten வெற்றியாளராக தெரிவு!

Brisbane is hosting the second leaders' debate between Scott Morrison and Bill Shorten.
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில் நேற்றைய தினம் பிரதமர் Scott Morrison-க்கும் எதிர்க்கட்சித்தலைவர் Bill Shorten-க்கும் இடையில் நேரடியான இரண்டாவது பகிரங்க விவாதம் நடைபெற்றது.

நேற்றைய விவாதத்திலும் எதிர்க்கட்சி தலைவர் Bill Shorten வெற்றியாளர் என்று விவாதத்தை நேரில் காண்பதற்கு சமூகமளித்திருந்த வாக்காளர்கள் அறிவித்துள்ளார்கள்.

பிரிஸ்பேர்னில் ஸ்கை நியூஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒரு மணிநேர விவாத்தில் கலந்துகொண்ட வாக்களர்களில் 43 வீதமானவர்கள் Bill Shorten வெற்றியாளர் என்று தெரிவு செய்ய, 41 வீதமானவர்கள் Scott Morrison வெற்றியாளர் என்று தெரிவுசெய்துள்ளார்கள். 16 வீதமானவர்கள் தங்களால் முடிவுசெய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள்.

நேற்றைய விவாதத்தின்போதும் இரண்டு தலைவர்களும் தங்களது அரசியல் கொள்கைகள் குறித்தும் நாட்டின் சிக்கலான தேவைகள் குறித்த தங்களின் வழிகளையும் தெளிவுபடுத்தினார்கள். அநேக தருணங்களில் Bill Shorten-இன் பதில்கள் திருப்திகரமாக அமைந்தன என்பது மாத்திரமல்லாமல் கலந்துகொண்ட வாக்காளர்களினால் விரும்பத்தக்கவைகையில் Scott Morrison-இன் கேள்விகளையும் வாதங்களையும் முறியடித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bill Shorten பல தருணங்களில் Scott Morrison-இன் கேள்வியெழுப்பும் அணுகுமுறைகளையும் நகைச்சுவையுடன் எதிர்கொண்டதும்கூட வாக்களர்களுக்கும் அவர் மீதான விருப்பு அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தமது எழுச்சியை அவ்வப்போது நெருங்கிவருகின்ற லிபரல் கட்சியை எதிர்க்கட்சித்தலைவர் மிகப்பொறுமையான வழிமுறைகளால் தோற்கடித்துவருகின்றமை நாட்டு மக்களில் பலருக்கு லேபரை நோக்கிய ஆதரவை பெருக்கியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now