SKIP TO MAIN CONTENT

இரு வேறு வங்கிகளுக்கிடையில் உடனடி பணப்பரிமாற்றம் சாத்தியமாகிறது

From January new technology will allow bank transfers from different institutions to be as fast as 30 seconds.
From January new technology will allow bank transfers from different institutions to be as fast as 30 seconds. Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

இரு வெவ்வேறு வங்கிகளுக்கிடையில் Electronic money transfer-இலத்திரனியல் பணப்பரிமாற்றம் செய்வதைத் துரிதப்படுத்தும் சிறப்புப்பொறிமுறையை, ஆஸ்திரேலிய ரிசேர்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி இரு வெவ்வேறு வங்கிகளுக்கிடையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, 30 செக்கன் முதல் ஒரு நிமிடத்திற்கிடையில் குறித்த பணம் வைப்புச்செய்யப்பட்டுவிடும் என குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

நாடு முழுவதும் தற்போது பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் 50 ஆண்டுகள் பழமையானது என்பதுடன், ஒரு வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்கு இலத்திரனியல் பணப்பரிமாற்றம் ஊடாக அனுப்பப்பட்ட பணம், குறித்த வங்கிக் கணக்கைச் சென்றடைய 2 - 5 நாட்கள் வரை எடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now