பல ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நிகழ்கின்ற "இரத்த நிலவு" ஆஸ்திரேலிய வானில் நாளை அதிகாலை தோன்றவுள்ளது.
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி குறுக்கிடுன்ற தருணத்தில் பூமியின் வியாபித்த நிழல் நிலவில் விழுகின்ற அபூர்வ தருணம் இதுவாகும்.
இந்த தருணத்தின்போது நிலவு இரத்தச்சிவப்பாக தோன்றும். இந்த அபூர்வமான தருணம் ஆஸ்திரேலியாவில் நாளை காலை - சிட்னி மெல்பேர்ன் நேரப்படி - அதிகாலை 4.24 மணி முதல் 43 நிமிடங்களுக்கு நிகழவுள்ளது. இந்த வான அதிசயம் அடுத்த தடவை 2141 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதியன்றுதான் நடைபெறும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
பூமியும் சூரியனும் நிலவும் ஒரே நேர்கோட்டில் வருகின்ற இந்த நிகழ்வு அடுத்த தடவை பூமிக்கு அருகாக இடம்பெறுவதற்கு 270 வருடங்களாகும் என்றும் அதனால் நாளைய தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த அதிசயத்தை வெற்றுக்கண்களாலேயே பார்க்கமுடியும் என்றும் இரத்த நிலவை தரிசிக்க ஆர்வமுடையவர்கள் தொலைநோக்கியை பயன்படுத்தலாம் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியுள்ளார்.
