கோவிட் மற்றும் Flu தொற்றைக் கண்டறியும் புதிய உபகரணம் தற்போது கிடைக்கிறது!

கோவிட்-19 மற்றும் influenzas A மற்றும் B ஆகியவற்றைக் கண்டறியக்கூடிய Combination rapid antigen tests இப்போது கிடைக்கின்றன.

A woman blowing her nose

Combination rapid antigen tests can pick up COVID-19 as well as Influenza A and B. Source: AAP

Key Points
  • கூட்டு RATகளால் COVID-19, influenza A மற்றும் influenza B ஆகியவற்றை அடையாளம் காண முடியும்.
  • ஆஸ்திரேலியாவில் ஏழு வெவ்வேறு சோதனை உபகரணங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • ஆஸ்திரேலியாவில் ஏழு வெவ்வேறு சோதனை உபகரணங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
Influenza A, Influenza B மற்றும் கோவிட்-19 ஆகியவற்றைப் பரிசோதிக்கும் Combination rapid antigen tests (RATs) சமீபத்தில் மருந்தகங்களில் விற்கத் தொடங்கியுள்ளன.

Combination rapid antigen tests, சாதாரண கோவிட் சோதனை உபகரணத்தைப் போலவே செயற்படுகின்றன.

Influenza A , Influenza B மற்றும் கோவிட்-19 ஆகியவற்றுக்கான முடிவை, குறித்த உபகரணத்திலுள்ள தனித்தனி கோடுகள் காண்பிக்கும்.

Combination RATs எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

Influenza மற்றும் கோவிட்-19 ஆகியவை ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவது அரிது என Deakin பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் பிரிவு தலைவரான பேராசிரியர் Catherine Bennett கூறுகிறார்.

ஒரே நேரத்தில் Influenza மற்றும் கோவிட்-19 ஐ பரிசோதிக்கும் திறன், ஆஸ்திரேலியாவின் flu season தொடங்கும் குளிர்காலத்திற்கு முன்னதாக பயனுள்ளதாக இருக்கும் என பேராசிரியர் Bennett கூறுகிறார்.

வைரஸ்களுக்கு நேர்மறையாக சோதனை செய்தவர்கள் பொதுவாக ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு கோவிட்-19 அல்லது Influenza இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்வது அவர்களின் நோயை சிறப்பாக நிர்வகிக்க உதவும் என்று அவர் கூறினார்.
Fingers holding up a rapid antigen test with display areas for influenza A and B.
Home test kits used to identify influenza varieties (pictured above) and combination COVID-19 and influenza RATs have been available in other countries for some time. Source: Getty / Future Publishing
காய்ச்சலுக்கான நேர்மறையான முடிவைப் பெறுபவர்கள், தொடர்ச்சியான மருத்துவ பராமரிப்புக்காக தமது குடும்ப மருத்துவரை அணுக வேண்டும் என்றும், நேர்மறையான கோவிட்-19 முடிவைப் பெறுபவர்கள் தங்கள் கடமைகள் என்ன என்பதைப் பார்க்க தங்கள் மாநில அல்லது பிராந்திய சுகாதாரத் துறையின் இணையத்தளங்களைப் பார்வையிடலாம் என்றும் TGA கூறுகிறது.

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கோவிட்-19 rapid antigen self-tests மற்றும் combination self-tests அனைத்தும் TGAs websiteஇல் பட்டியலிடப்பட்டுள்ளன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Aleisha Orr
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
கோவிட் மற்றும் Flu தொற்றைக் கண்டறியும் புதிய உபகரணம் தற்போது கிடைக்கிறது! | SBS Tamil