SKIP TO MAIN CONTENT

ஈஸ்டர் விடுமுறை காலத்தில் தேர்தல் விளம்பரமில்லை: கட்சிகள் இணக்கம்!

PM Morrison and Labor Leader Shorten
PM Morrison and Labor Leader Shorten. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஈஸ்டர் மற்றும் அன்சாக் தின விடுமுறைகளில் தேர்தல் விளம்பரங்களுக்கு ஓய்வளிப்பது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு, பெரிய வெள்ளி மற்றும் அன்ஸாக் தினங்களில் தேர்தல் தொடர்பிலான தங்களது கட்சி விளம்பரங்களுக்கு ஓய்வளிக்கப்போவதாக பிரதமர் Scott Morrison உறுதியளித்துள்ள அதேநேரம் எதிர்கட்சித்தலைவர் Bill Shorten பெரிய வெள்ளி மற்றும் அன்ஸாக் தினங்களில் விளம்பரங்களுக்கு ஓய்வளிக்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி கடந்த வார விடுறையின்போது அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது நடைபெறவில்லை. ஆனால், எதிர்வரும் மே 18 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியிடப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கான விளம்பரங்களை எதிர்வரும் விடுமுறை நாட்களில் மக்கள் மத்தில் கொண்டு சென்று அவர்களது இயல்பு வாழ்க்கையில் அசௌகரியங்களை ஏற்படுத்துவதில்லை என்று பிரதான கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now