கொடூரமான கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான பயணங்களை இடைநிறுத்துவது குறித்து The West Australian ஊடகம் செய்தி வெளியிடுகையில், இந்தியாவை 'நரகம்' எனத் தலைப்பிட்டமைக்கு மன்னிப்புக்கோரவேண்டும் என்று Indian Society of Western Australia குறிப்பிட்ட ஊடகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுமார் 80 அமைப்புக்களைச்சேர்ந்த முப்பதினாயிரம் உறுப்பினர்களுக்கு தாய் சங்கமாக விளங்கும், Indian Society of Western Australia அமைப்பு இந்த கடிதத்தினை West Australian ஊடகத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
இந்தியாவில் தற்போது இடம்பெற்றிருப்பது பாரிய மனிதப்பேரழிவு. இதனைப்புரிந்துகொள்ளாமல் இந்தியாவையும் இந்தியர்களையும் புண்படுத்தும்வகையில் செய்தி வெளியிடுவது, ஊடக ரீதியாக பொறுப்பற்றதனம் மாத்திரமல்லாமல், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாகும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
