SKIP TO MAIN CONTENT

இவரைக் காவல்துறையினர் தேடுகின்றனர்!

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Indecent assault of Melbourne schoolgirl caught on CCTV
Indecent assault of Melbourne schoolgirl caught on CCTV Source: Source Victoria Police

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

மெல்பேர்ன் Reservoir பகுதியில் கடந்த வாரம் 15 வயது மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட நபரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

கடந்த 22ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு Reservoir-இல் Plenty Road shopping centre-இன் பின்புறமாக உள்ள பாதையால் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, குறித்த மாணவியின் எதிர்ப்புறமாக வந்த இளைஞர்,  மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்டதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

20- 29 வயது மதிக்கத்தக்க இவர், இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now