கிறிஸ்தவர்கள் வழிபடும் ஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர் என்றும், கருப்பு நிறம் கொண்டவர் என்றும், அவர் சிவ பெருமானை தியானித்து சமாதி நிலைக்கு சென்ற ஒரு சித்தர் எனவும் இந்து சமய அடிப்படைவாத இயக்கமான Rashtriya Swayamsevak Sangh ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கணேஷ் தாமோதர் சாவர்கர் Christ Parichay என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் இது இந்தியாவில் சர்ச்சையாக மாறியுள்ளது.
புத்தகத்திலுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
- ஏசு கிறிஸ்துவின் நிஜப்பெயர் கேசவ் கிருஷ்ணா.
- தமிழ்தான் அவரது தாய் மொழி.
- ஏசு கிறிஸ்து இயல்பில், தமிழகத்து இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர்.
- தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா பிராமணர் ஜாதி என்றே அழைக்கப்படுகிறது.
- ஏசுவின் 12வது வயதில் அவருக்கு பூணூல் போடும் சடங்கு நிறைவேற்றப்பட்டது.
- ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் திரிந்து சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
- தமிழும், சமஸ்கிருதமும் அக்காலத்தில் உலகின் ஆதி மொழிகளாக இருந்தன.
- ஜெருசலேம், அரபு நாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தது. இப்போதும்கூட அரபு மொழிகளில் தமிழின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியும். அப்படித்தான் பாலஸ்தீன் பகுதியில் பிறந்த ஏசுவுக்கும் தமிழ் தாய் மொழியாக இருந்தது.
- ஏசு இந்தியாவுக்கு வந்து யோகா பயின்றிருந்தார்.
- ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகும், தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்கள் மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர்.
- ஏசு தனது இறுதி காலத்தில், இமயமலை பகுதியில், லிங்க வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்தார்.
- 3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவுக்கு சிவபெருமான் காட்சியளித்து முக்தியை அளித்தார்.
- பல்வேறு பகுதிகளி்ல இருந்தும் சாதுக்களும், முனிவர்களும் அங்கு வந்து ஏசுவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனர். ஏசுவை ஈஷாநாத் என்றே முனிவர்கள் அழைத்தனர்.
- ஏசு தனது 49வது வயதில், இந்த ஜட உடலை விட்டுச் செல்ல முடிவு செய்தார். இதன்பிறகு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார்.
- இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளது.
- கிறிஸ்தவம் என்பது தனி மதம் கிடையாது. இந்து மதத்தின் ஒரு அங்கமே கிறிஸ்தவம். பைபிள் ஏசு கூறிய வார்த்தைகள் கிடையாது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதாக ஏற்கனவே விமர்சனத்திற்கு ஆளாகிவரும் ஆர்.எஸ்.எஸ் தற்போது கிறிஸ்தவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதுபோன்ற நடவடிகையில் இறங்கியிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
சாவர்கர் நேஷனல் மெமோரியல் என்ற அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களின், கொள்கை, கோட்பாடு, இலங்கியங்களை பாதுகாத்து வருகிறது. இவ்வமைப்புதான், வரும் 26ம் தேதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் புதிய தகவல்களை தெரிவிப்பதை போல இருப்பினும், கிறிஸ்தவர்கள் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களுக்கு எதிரானதாக உள்ளது.
A Mumbai-based right-wing trust is reissuing a 1946 book by one of the founders of the Rashtriya Swayamsevak Sangh that claims Jesus Christ was born a Tamil Hindu. The book — Christ Parichay — claims Jesus was a Vishwakarma Brahmin by birth and that Christianity is just a sect of Hinduism. The Swatantryaveer Savarkar Rashtriya Smarak (Savarkar National Memorial), a trust that preserves and propagates the Savarkar brothers' literature and ideology, will release the Marathi book on February 26.
While it does not specify where Christ was born, it says the present day Palestinian and Arab territories were Hindu land and that Christ traveled to India where he learnt yoga. The author Ganesh Damodar (Babarao) Savarkar is Vinayak Damodhar (Swat-antryaveer) Savarkar's older brother and is one of the five people who founded the RSS.
The book makes several claims — that Jesus Christ was a Tamil Hindu, his real name was Keshao Krishna, Tamil was his mother tongue, and his complexion was dark. The book claims Christ's sacred thread ceremony (janeyu) was held when he was 12, as per Brahmin tradition, and that he wore the sacred thread like any other Hindu. It also claims that Christianity was a Hindu cult and doctrine introduced by Christ and was never a separate religion.
Ganesh Savarkar also claims that people from the Essenes cult, which practiced Yoga and spiritual science, saved Christ after his detractors crucified him. The book claims his rescuers treated Christ with medicinal herbs and plants to revive him from his deathbed. After this, Christ was taken to Kashmir in India where he prayed to Lord Shiva, the book adds. It claims Christ spent the last phase of his life in the Himalayas. A tomb where his remains are buried, it claims, is known by his name. According to the book, Arabia was a Hindu land and Jews were Hindus. Savarkar claims Arabic has many Sanskrit and Tamil words. He further claims that Palestine's Arabic Language was a version of the Tamil language.
Here are a few claims made by the book, reports Mid-day:
- Jesus Christ was a Tamil Hindu.
- His real name is Keshao Krishna.
- Tamil was his mother tongue.
- Jesus Christ's complexion was dark.
- Christ's `janeyu` ceremony was held when he was 12, as per Brahmin tradition.
- Jesus' family dressed in Indian way.
- Christianity was never a separate religion, but a Hindu cult and doctrine introduced by Christ.
- People belonging to the Essenes cult, which practiced Yoga and spiritual science, saved Christ after his detractors crucified him. The book further claims that Christ was treated with medicinal herbs and plants, which helped him revive.
- Christ spent the last phase of his life in the Himalayas.
- After regaining health, Christ established a 'math' (monastery) at the foothills of the Himalayas, probably in Kashmir. He worshipped Lord Shiva there for three years and achieved 'darshan' of Shiva.
- Christ was 49 years old when he decided to leave his physical body. He sat in a yogic posture and went into deep samadhi.
- Arabia was a Hindu land and Jews were Hindus.
- Arabic has many Sanskrit and Tamil words.
- Palestine's Arabic Language is a version of Tamil language.
