SKIP TO MAIN CONTENT

இயற்கைப் பேரழிவு அபாயம் உள்ள நாடுகளில் நாம் எத்தனையாவது இடம்?

AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS



Skip to article content

உலகில் இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் அட்டவணையில், தெற்காசிய நாடுகள், பசிபிக் தீவிலுள்ள நாடுகள் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் முன் நிற்கின்றன.

நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டால், இந்தநாடுகள் எப்படிச் சமாளிக்கும் என்று 171 நாடுகளைப் பட்டியல்படுத்தியதில், Vanuatu முதலாவது இடத்திலிருக்கிறது.  அதைத்தொடர்ந்து, Tonga, Philippines, Guatemala மற்றும் Bangladesh ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியா 121 வது இடத்திலும் இந்தியா 77வது இடத்திலும் இலங்கை 62வது இடத்திலும் சிங்கப்பூர் 159வது இடத்திலும் ஜேர்மனி 148வது இடத்திலும் இருக்கின்றன.

இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாக உள்ள நாடுகளாக Qatar, Malta, Saudi Arabia, Barbados, Grenada ஆகியன காணப்படுகின்றன.

அதேநேரம் ஜப்பான்(17) மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், பல இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டாலும் அதிலிருந்து பாதுகாக்கும் வழிகளை அறிந்துள்ளார்கள் என்று World Risk Report என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனத்தின் அதிபர் Peter Mucke கூறினார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now