ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயணம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இதுவரைகாலமும் நியூசிலாந்து பயணிகள் மாத்திரம் ஆஸ்திரேலியாவுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பயணம்செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், ஆஸ்திரேலியர்களும் இனி நியூசிலாந்துக்கு பயணம்செய்ய முடியும்.
இதற்கான அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இன்று வெளியிட்டார்.
இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதி இரவு 11.59 மணி முதல் ஆஸ்திரேலியர்கள் நியூசிலாந்தின் எந்தப் பகுதிக்கும் பயணம்செய்ய முடியும்.
நியூசிலாந்துக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயணம் மேற்கொள்ளும் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்பது கட்டாயமல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இருநாடுகளுக்கிடையிலான இப்பயண ஏற்பாடு மகிழ்ச்சியான ஒன்று என்றபோதிலும் இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்டால் மக்கள் தமது பயண ஏற்பாடுகளில் மாற்றம்செய்ய வேண்டியிருக்கும் என்பதுடன் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என நியூசிலாந்து பிரமதர் Jacinda Ardern தெரிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
