SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாகத் தான் பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

PM acinda Ardern .jpg
Prime Minister Jacinda Ardern announces her resignation at the War Memorial Centre on January 19, 2023 in Napier, New Zealand.

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS


Skip to article content

அடுத்த தலைவரை வழிநடத்த அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும், அதன் அடிப்படையில் தனது முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், முடிந்தவரை புதிய தலைவருக்கான மாற்றம் சீராக இருப்பதை உறுதி செய்வதாக உறுதியளித்தார்.

இந்தப் பதவியில் தான் தொடர்வதை விட, இன்னொருவரிடம் கையளிப்பது, நாட்டிற்கும் பொது மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.

———-

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now