SKIP TO MAIN CONTENT

1380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் எப்படி இருந்தது? துவங்கியது விண்வெளி ஆய்வு

NASA புதிய விண்வெளித்தொலைநோக்கி ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது. இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த பிரபஞ்சம் எப்படி பிறந்தது என்பதற்கான விடையையும், அந்த காஸ்மிக் விடியலின்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்லும் திட்டத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

 James Webb Space Telescope
The fully assembled James Webb Space Telescope with its sunshield and unitized pallet structures that will fold up around the telescope for launch. Source: NASA

5 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

Space telescope என்பது விண்வெளியில் சுழன்று, பேரண்டம், பிரபஞ்சம் மற்றும் அங்குள்ள கோள்கள் என்பவற்றை ஆராயும் தொலைநோக்கியாகும். விண்வெளிக்கு 1990 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட Hubble என்ற தொலைநோக்கியே இதுவரை இந்தப்பணியைச் செய்துகொண்டிருந்தது.

விண்வெளி தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக நாம் திரட்டியுள்ள தகவல்கள் மற்றும் பெற்றுக்கொண்டுள்ள புகைப்படங்கள் ஆகியவற்றுள் பெரும்பான்மையானவை Hubble மூலமாகப் பெற்றுக்கொண்டவைதான். இந்த பிரபஞ்சத்தின் வயது 1380 கோடி ஆண்டுகள் என்று நிர்ணயித்துக்கொள்ள உதவியதும் இந்த Hubble தொலைநோக்கிதான். இந்த Hubble இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து இது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

The Hubble Space Telescope
The Hubble Space Telescope. Source: NASA

Hubble இன்னும் இயங்கிக்கொண்டிருந்தாலும் எதிர்காலத்தில் இதைவிட ஆற்றல்மிக்க தொலைநோக்கி தேவைப்படும் என்பதை உணர்ந்த NASA விஞ்ஞானிகள், 1996 ஆம் ஆண்டே James Webb telescope project ஐ ஆரம்பித்துவிட்டார்கள். Apollo யுகத்தில் NASA வின் முக்கிய நிர்வாகியாகவிருந்த James Webb இன் பெயர் இந்த தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் European Space Agency- ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் Canadian Space Agency-கனேடிய விண்வெளி ஆராய்ச்சி மையம் என்பனவும் இணைந்துகொண்டன.

கடந்த 26 வருடங்களாக 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த James Webb Space Telescope சென்ற வாரம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. French Gayana வில் உள்ள Gayana Space Research Centre இல் இருந்து ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் Ariane 5 ஏவுகணையின் மூலமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 1.5 மில்லியன் கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் நிறுவப்படும்.

பூமியிலிருந்து ஏவப்பட்டுள்ள James Webb Space Telescope நிலைகொள்ளவேண்டிய Earth Sun lock range என்ற புள்ளியை அடைய 29 நாட்கள் எடுக்கும். இந்த 29 நாட்கள் NASA விஞ்ஞானிகளைப் பொறுத்த அளவில் ‘29 திகில் நிறைந்த நாட்கள் ’ 29 days on the edge என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்த 29 நாட்களுக்குள் குறிப்பிட்ட எல்லா சோதனைகளையும் செயற்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்டு கணிக்கப்படும். இதில் ஏதாவது ஒன்றில் பிழை ஏற்பட்டாலும் கூட இந்த தொலைநோக்கி செயற்படாமற் போய்விடக்கூடும். இந்தச் சோதனைகள் யாவும் பூமியில் பல முறை பரீட்சித்துப்பார்க்கப்பட்டவை என்றபோதும் விண்வெளியிலும் அவையாவும் வெற்றிகரமாக செயல்படுவதிலேயே இந்த திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. ஏதாவது ஒன்று எதிர்பார்த்தபடி செயல்படாவிட்டால் back up என்ற மாற்றுத்திட்டங்களையும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.

Scientists will use the James Webb Space Telescope to determine whether the new exoplanet has an atmosphere.
韋伯太空望遠鏡即將執行任務 Source: European Space Agency/AAP

Hubble உடன் ஒப்பிடும் போது James Webb தொலைநோக்கி மிகவும் ஆற்றல் மிக்கது.

James Webb Space Telescope , Hubble telescope ஐவிட 100 மடங்கு ஆற்றல் அதிகமானதாகும். இந்த பிரபஞ்சம் எப்படி பிறந்தது என்பதற்கான விடையையும், அந்த காஸ்மிக் விடியலின்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கிச் சொல்வதுதான் Webb-இன் முதல் பணியாகும். அதனால்தான் Hubble-ஐ விட 100 மடங்கு திறன்மிகுந்ததாக இதை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

Hubble ஆல் செய்யமுடியாத பல காரியங்களை James Webb செய்ய வல்லது. Infra red என்ற கதிர் அலைவரிசையில் மிகவும் துல்லியமான காட்சிகளை அது பதிவுசெய்யவல்லது என்பதோடு காட்சிகளில் மற்றும் படங்களில், அதிக details என்ற நுணுக்கமான விவரங்களத் தரவல்லது. வானியல் ஆராய்ச்சியாளர்கள், பிரபஞ்சத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க James Webb உதவும். புதிய நட்சத்திரங்கள் தோன்றக் காரணமாக இருக்கும் dust cloud இன் உட்பகுதியை ஆராயவும் காலப்பிரமாணத்தைப் பொறுத்தவரை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிப்பதன் அனுகூலங்களைப் பெறவும் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, 1380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சம் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதை James Webb கோடிட்டுக்காட்டும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அத்தோடு சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை அறிய வெவ்வேறு கோள்களின் வளிமண்டலத்தை scan என்ற முறையில் ஆராயவும் James Webb தொலைநோக்கியால் முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதைத்தவிரவும் விஞ்ஞானிகள் எதிர்பாராத முற்றிலும் பல புதிர்களை இந்த தொலைநோக்கி அவிழ்க்கக் கூடும் என்றும் இந்த பிரபஞ்சம் பற்றிய புரிதலில் நம்மை இது புதிய தளத்திற்கு எடுத்துச்செல்லக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

NASA’s James Webb Space Telescope was launched in South America on December 25, 2021.
NASA’s James Webb Space Telescope launched Dec. 25 at 7:20 a.m. EST on an Ariane 5 rocket from Europe’s Spaceport in French Guiana, on the northeastern coast of South America. Source: NASA/Cover Images via AAP Photos

நாம் இருப்பது பூமியில்; பூமி இருப்பது சூரியக்குடும்பத்தில்; சூரியக்குடும்பம் இருப்பது பால்வெளி மண்டலத்தில் (அண்டம்); பால்வெளி மண்டலம் இருப்பது பேரண்டத்தில் (Universe). இந்தப் பேரண்டம், பிரபஞ்சம் எல்லாம் உருவானது Big Bang Therory (பெருவெடிப்பு கோட்பாடு) காரணமாக என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அந்த பெருவெடிப்பு நிகழ்ந்துதான் 1380 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

அந்தப் பெருவெடிப்பு நடந்து சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களோ, வேறு அண்டங்களோ தோன்றவில்லை. ஆற்றல் மூலமாக விளங்கிய அந்தப் பெருவெடிப்பு நடந்த இடத்திலிருந்து எந்த ஒளியும் வெளிவரவில்லை. இதை, `Dark Age’ என்கின்றனர் விஞ்ஞானிகள். அதற்குப் பிறகு பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையவே, திடீரென பிரபஞ்ச மூலத்திலிருந்து ஒளி வீசத்தொடங்கியது; அதன் ஆற்றலில், நட்சத்திரங்கள், அண்டங்கள், கோள்கள் அனைத்தும் அடுத்த கோடிக்கணக்கான ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகின. நட்சத்திரங்கள் இணைந்து அண்டக்கூட்டங்கள் உருவாகின; அண்டக்கூட்டத்தில் கோள்கள் உருவாகின. அதில் ஒன்றான இந்தப் பூமியில் உயிர்களும் உருவாகின. இப்படி அனைத்துக்கும் காரணமான அந்த ஒளி பிறந்த நிகழ்வைத்தான், Cosmic Dawn (காஸ்மிக் விடியல்) என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இது ஏன் நடந்தது என்பதற்கு விஞ்ஞானிகளிடம் இதுவரை விடையில்லை. ஆனால் James Webb இந்த கேள்விக்கும் இதுபோன்ற பல கேள்விகளுக்கும் விடையளிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். “James Webb ‘எல்லாம் எப்படி ஆரம்பித்தது’ என்ற கேள்விக்கு விடை தரும் என்று நம்புகிறோம்” என்று NASA வின் இந்த James Webb திட்டத்தின் senior scientist உம் Big Bang கோட்பாட்டின் முன்னோடியும் நோபல் பரிசு பெற்றவருமான astrophysicist John Mather கூறுகிறார்.

NASA / European space agency / Canadian space agency ஆகிய அமைப்புக்களின் கூட்டுத் தயாரிப்பான James Webb உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி. பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோணத்துண்டுகளை இணைத்துத் தயாரிக்கப்பட்ட தங்கக் கண்ணாடிகள் இந்த தொலைநோக்கியில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறுகோணத் துண்டிலும் 48.2 gram தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. அவை reflector ஆக செயல் படுகின்றன. இந்த ஒவ்வொரு அறுகோணத் துண்டும் 22 அடி அகலமுடையவை. சூரியனின் வெப்பத்திலிருருந்து இந்த தொலைநோக்கியைப் பாதுகாக்க இதன் மீது அமைக்கப்பட்டுள்ள ஐந்தடுக்கு வெள்ளிக் கவசமானது ஒரு டென்னிஸ் மைதானம் அளவு பெரியது. Hubble ஐ விட பல மடங்கு தொலைவில் இந்த James Webb விண்வெளியில் நிறுவப்படவிருக்கிறது. சூரியனின் வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய சூட்டைத் தவிர்க்குமுகமாக இந்த இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. பூமியின் நிழல் கவசம் போல அல்லது குடைபோல இந்த தொலைநோக்கியை தொடர்ந்து பாதுகாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள.

இந்த James Webb தொலைநோக்கி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 1.5 மில்லியன் கி.மீ தொலைவை சென்றடைய 29 நாட்கள் எடுக்கும். அதன்பின்பு அனுப்பப்பட்ட ஏவுகணையின் உட்புறக் கலத்திலிருந்து இந்த தொலைநோக்கியை வெளியே எடுப்பது மிகவும் சிக்கலான காரியமாகும். இது போன்றதொரு சிக்கலான காரியத்தை NASA இதுவரை செய்ததில்லை என்று சொல்கிறார்கள். இந்த தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள 18 கண்ணாடிப் பகுதிகளை மெதுவாகவும் கவனமாகவும் வெளியே எடுத்து சீரமைக்க மூன்று மாதங்கள் எடுக்கும். அந்த 18 கண்ணாடிகளின் பிக்ஸல்களை ஒன்றிணைத்து தெளிவான காட்சிகளை அல்லது படங்களை உருவாக்கவேண்டும். அனைத்து கருவிகளும் சரியாக இயங்குவதை உறுதி செய்யவதற்கு மேலும் ஒரு மாதம் எடுக்கும் என நம்பப்படுகிறது.

Hubble's image of grand spiral galaxy M100
Source: NASA

இறுதிக் கட்டமாக, Mid Infra red Instrument, Near infra red camera, Near infrared imager and slitless spectrograph, Fine guidance sensor, Near infra red spectrograph என்பவற்றின் நேர்த்தியான செயல்பாடு உறுதிசெய்யப்படவேண்டும். விண்வெளிக்கு அனுப்பி சுமார் 6 மாதங்களில் James Webb செயல்பட ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி எல்லாம் சரிவர இயங்குவது உறுதிசெய்யப்பட்டால் குறைந்தது பத்துவருடங்கள் அது செயல்படுவதற்கான எரிபொருள் அதன்வசம் இருப்பதாகவும் எரிபொருள் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்டால் அதற்கு மேலும் அது செயற்படக்கூடும் என்றும் இந்த திட்டத்தின் தலைவர் Mather தெரிவித்திருக்கிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now