நாட்டில் கொரோனா பரவலையடுத்து வேலை இழந்தவர்களுக்கும் நிதிநெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கும் உதவும் வகையில் அரசு அறிமுகப்படுத்திய Jobseeker மற்றும் Jobkeeper கொடுப்பனவு திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் 2021 மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனூடாக வழங்கப்பட்ட கொடுப்பனவுத் தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் வருமாறு:
Jobseeker கொடுப்பனவு
இப்போது கொடுக்கப்படுவது(இருவார கொடுப்பனவு): 1115 டொலர்கள்
செப்டம்பர் 2020 முதல்(இருவார கொடுப்பனவு): 815 டொலர்கள்
வேலையற்றவர்களுக்கான கொடுப்பனவைப் பெற்றுவருபவர்கள், ஆகஸ்ட் 4 முதல் மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 4 இடங்களில் வேலைவாய்ப்புக்கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
Jobkeeper கொடுப்பனவு
இது இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.
முழுநேர வேலையாட்களுக்கான இருவார கொடுப்பனவு
இப்போது கொடுக்கப்படுவது: 1500 டொலர்கள்
செப்டம்பர் 2020 முதல்: 1200 டொலர்கள்
ஜனவரி 2021 முதல்: 1000 டொலர்கள்
பகுதிநேர வேலையாட்களுக்கான இருவார கொடுப்பனவு
இப்போது கொடுக்கப்படுவது: 1500 டொலர்கள்
செப்டம்பர் 2020 முதல்: 750 டொலர்கள்
ஜனவரி 2021 முதல்: 650 டொலர்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
