SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்!

Perth Scorchers coach Justin Langer
Source: AAP

1 min read

Published

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Justin Langer, ஆஸ்திரேலிய  கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று காலை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சுரண்டி சேதப்படுத்திய விவகாரத்தை  அடுத்து, முன்னாள் பயிற்சியாளர் Darren Lehmann தனது பதவியை இராஜினாமா செய்திருந்தநிலையில் அவரது இடத்துக்கு தற்போது Justin Langer நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மே 22 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்கவுள்ள Justin Langer, அடுத்த நான்கு வருடங்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக செயற்படுவார்  என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பந்தை சுரண்டி சேதப்படுத்திய விவகாரத்தில் பாரிய சர்ச்சை ஏற்பட்டு அணியின் முக்கிய வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியில், மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் Justin Langer தனது பணியை முன்னெடுப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now