பிலிப்பீன்ஸின் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிகாண் கூடைப்பந்தாட்டப்போட்டியில் கைகலப்பில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மூவர் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கூடைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கு 135 ஆயிரம் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற ஆஸ்திரேலிய - பிலிப்பீனோ அணிகளுக்கு இடையிலான போட்டியிலேயே இந்த கைகலப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
போட்டியின் நடுவில் தீடீரென்று ஏற்பட்ட மோதலில் இரண்டு தரப்பு வீரர்களும் மாத்திரமல்லாமல் பயிற்றுவிப்பாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தை விசாரணை செய்த சர்வதேச கூடைப்பந்தாட்ட சம்மேளனம் இரண்டு பயிற்றுவிப்பாளர்களுடன் பிலிப்பீனோ அணியை சேர்ந்த 13 வீரர்களுக்கு இடைக்கால தடையும் ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் மூன்று வீரர்களுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது.அத்துடன் ஆஸ்திரேலிய கூடைப்பந்தாட்ட சம்மேளனத்துக்கும் அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்களான Daniel Kickert, Thon Maker, Chris Goulding ஆகியோரே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். இவர்களில் Daniel Kickert ஐந்து போட்டிகளிலும் Thon Maker மூன்று போட்டிகளிலும் Chris Goulding ஒரு போட்டியில் விளையாடுவதற்கும் தடைவிதித்து சர்வதேச கூடைப்பந்நதாட்ட சம்மேளனம் தீர்ப்பு வழங்கியுள்ளது
