சிறிலங்காவில் பெரிய ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புத்தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தனிநாட்டுக்காக போராடும் தீவிரவாத அமைப்பு என்று கூறப்படுகின்ற ISIS பொறுப்பேற்றுள்ளது.
அமாக் செய்திச்சேவையின் ஊடாக ISIS அமைப்பு இந்த அறிவிப்பை சற்று முன்னர் வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் நேச அணிகளுக்கு எதிராகவும் சிறிலங்காவிலுள்ள கிறீஸ்தவர்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்களது அமைப்பினரே என்று ISIS அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
தங்களது தாக்குதல்களுக்கு அந்த அமைப்பு எந்த விதமான ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் நியூஸிலாந்து கிறைஸ்ட்சேர்ச் மசூதிகளிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததைத்தொடர்ந்து தற்போது ISIS அமைப்பின் மேற்படி அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
