சர்வதேச ரீதியில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களே ஆகப்பெரியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளன என்று சர்வதேச பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் தெரித்துள்ளனர்.
செப்ரெம்பர் 11 பேரழிவுக்கு பின்னர் உலக அளவில் இடம்பெற்றுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் சம்பவங்கள் இவை என்றும் அவர்கள் மேலும் மதிப்பீடு செய்துள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் வருமாறு - ஐ.எஸ் - இஸ்லாமிய அமைப்பு உரிமைகோரிய தாக்குதல் சம்பவங்கள்:
கடந்த ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நேரத்தின்போது பிலீப்பீன்ஸில் தேவாலயமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வருடம் மே மாதம் இந்தோனேஷியாவில் மூன்று தேவாலயங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தார்கள்.
2017 ஆம் ஆண்டு எகிப்தில் இரண்டு தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டார்கள்.
அல் கொய்தா அமைப்பினால் 2010 இல் ஈராக்கின் பக்தாத் நகரில் தேவாயலயமொன்றில் ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டார்கள்.
2014 ஆம் ஆண்டு ஓமானில் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டார்கள்.
2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சியில் தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்களில் லக்ஷர் - இ - தொய்பா இயக்கம் நடத்திய தாக்குதலில் 158 பேர் கொல்லப்பட்டார்கள்.
ஆனால், சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீதான தாக்குதல்கள் மிகப்பெரியளவில் அழிவையும் அதே நேரம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
