இலங்கைகையில் நட்சத்திரவிடுதிகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் பலர் உயிரிழந்துள்ள அதேநேரம் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தினமான இன்று ஏறக்குறைய ஒரேநேரத்தில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு கட்டானையில் உள்ள தேவாலயம், கொழும்பிலுள்ள சினமன் க்ராண்ட், கிங்ஸ்பெரி, சங்ரிலா ஆகிய 3 நட்சத்திரவிடுதிகளிலும் இவ்வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்திலும் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130-க்கும் மேல் என்றும் அதில் வெளிநாட்டவர்களும் அடங்குவதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 280-க்கும் அதிகம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
மேலதிக விபரங்களை இன்று இரவு 8 மணிக்கு எமது ஒலிபரப்பில் எதிர்பாருங்கள்.
