ஆஸ்திரேலியாவில் மருந்துகள் எனும் தலைப்பில் கேள்வி – பதில் வடிவில் இந்த கட்டுரையை எழுதியிருப்பவர் அன்பு ஜெயா அவர்கள். அவர் Pharmaceutical Chemistயாக பணியாற்றியவர்.
- 1. குழந்தைகளைப்பொறுத்தவரைமருந்துகள்விஷயத்தில்என்னமுன்னெச்சரிக்கைகள்எடுக்கவேண்டும்?
- முக்கியமாக மருந்துகள் குழந்தைகளுக்கு எட்டுகின்ற இடத்தில் வைக்கக்கூடாது. குழந்தைகளின் கண்ணுக்குத் தெரியாதபடி பாதுகாப்பாக வைத்திருத்தல் மிகவும் நல்லது.
- பெரியவர்களுக்கு என்று வாங்கிய ஒரு மருந்தை குழந்தைகளுக்கு பாதி அளவோ அதைவிட குறைத்தோ கொடுக்கலாமா என்று சில பெற்றோர்கள் கேட்பார்கள். சாதாரணமாக, இருமல் ஜலதோஷத்திற்குக் கொடுக்கும் மருந்துகள் விஷயத்தில் பெற்றோர்களுக்கு இந்த எண்ணம் தோன்றுகிறது. அப்படிக் கொடுப்பது ஆபத்தானது. அதைத் தவிர்க்க வேண்டும்.
- தற்போது 6 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு இருமல் ஜலதோஷ மருந்துகள் தருவது பலனளிப்பதில்லை என்று அவற்றின் வினியோகம் தடைசெய்யப் பட்டுள்ளது. மேலும் இந்த மருந்துகளை 6 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர், பார்மசிஸ்ட், நர்ஸின் அறிவுரையின் பேரில்தான் கொடுக்கவேண்டும் என்றும் கட்டுப்பாடு உள்ளது.
- மருத்துவர் கூறினாலொழிய ஆஸ்பிரின் என்ற மருந்தை 16 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடு உள்ளது.
- குழந்தைகளுக்கு மருந்துகள் வாங்கும்போது குழந்தையின் வயதை உங்கள் பார்மசிஸ்ட்டிடம் கூறி வாங்குவது நல்லது.
- மற்றவர்களுக்காக வாங்கிப் பயன்படுத்திய மருந்தை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
- குழந்தைக்கு ஒரு மருந்தைக் கொடுத்தபிறகு அது வழக்கத்திற்கு மாறாக நடந்துகொண்டால் மருத்துவர் அல்லது பார்மசிஸ்ட்டின் அறிவுரையைப் பெறுவது நல்லது.
- பொதுவாக திரவ வடிவில் உள்ள மருந்துகளுக்கு குழந்தைகள் திறப்பதற்குக் கடினமாக உள்ள மூடிகளைப் பயன்படுத்தி இருப்பார்கள். அவை child-resistant மூடிகள்தான், ஆனால் child-proof மூடிகள் அல்ல என்பதை பெற்றோர் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
- மருந்தை குழந்தைக்குக் கொடுத்த பின்னர் Child-resistant மூடியை அழுத்தமாக மூடி அது சுலபமாக திறக்க முடியாதபடி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
- 2. சாதாரண காய்ச்சல், இருமல் போன்றவைக்கு Pharmacist-ஐப் பார்ப்பது நல்லதா மருத்துவரைப் பார்ப்பது நல்லதா?
சிறுசிறு உபாதைகளுக்கு Pharmacist-கள் ஆலோசனையைப் பெறலாம். அவற்றுக்கு உங்கள் Pharmacist OTC மருந்துகள் கொடுக்க இயலும். உபாதை அதிகமானால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
- 3. தசை வழியாகக் கொடுக்கும் ஊசி மருந்துக்கும் இரத்தக்குழாய் வழி கொடுக்கும் ஊசி மருந்துக்கும் என்ன வித்தியாசம்?
தசை வழியாகக் கொடுக்கும் ஊசி மருந்து சற்று மெதுவாக வேலை செய்யும். இரத்தக்குழாய் வழி கொடுக்கும் ஊசி மருந்து உடனடியாக வேலை செய்யும். சில மருந்துகளை தசை வழி கொடுக்கக்கூடாது. சில மருந்துகளை இரத்தக்குழாய் வழி கொடுக்கக்கூடாது. எந்த மருந்தை எப்படிக் கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவார்கள்.
- 4. மருந்துகளைஎப்படிபாதுகாத்துவைப்பது?
மருந்துகள் குழந்தைகள், சிறுவர்கள் கையில் கிடைக்காதபடி பாதுகாப்பாக வைக்கவேண்டும். மருந்துகளின் Label-களில் அவற்றை வெப்பத்திலிருந்து எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கும். அதன்படி பாதுகாக்க வேண்டும்.
- 5. மருத்துவர்கொடுத்தமருந்தைபாதியில்நாமாகநிறுத்திவிடலாமா?
கூடாது. உங்கள் உடல்நிலை பற்றி உங்கள் மருத்துவரே நன்றாக அறிவார். நிறுத்துவதாக இருந்தால் அவருடைய ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பதே நல்லது. அந்த மருந்து உங்களுக்கு வேறு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தினால் அதை நிறுத்திவிட்டு மருத்துவரை நாடவேண்டும்.
- 6. மருந்துகளைEXPIRY DATE-க்குப்பிறகும்பயன்படுத்தலாமா?
மருந்துகளை EXPIRY DATE-க்குப் பிறகு பயன்படுத்தக் கூடாது. மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் மருந்துகளை Stability Studies என்ற ஒரு பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் அதன் மூலம் அந்த மருந்து எவ்வளவு காலம் அதன் முழுச் சக்தியுடன் செயல்படும், எந்த வெப்பநிலையில் (Temperature) அதைப் பாதுகாக்க வேண்டும், அதில் உள்ள மூலமருந்து ஏதாவது நச்சுத்தன்மையை வெளியிடுகிறதா என்பவற்றையெல்லாம் பரிசோதனை செய்துதான் EXPIRY DATE-ஐ முடிவு செய்வார்கள். அதனால் EXPIRY DATE-க்குப் பிறகு அந்த மருந்து வேலை செய்வதற்கோ, நச்சுத்தன்மை இல்லாமல் இருக்கும் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, மருந்துகளை EXPIRY DATE-க்குப் பிறகு பயன்படுத்தக் கூடாது.
- 7. மருந்துகளைசிறுமாத்திரைப்பெட்டிகளில்வைத்திருக்கலாமா?
மருந்துகள் விற்கப்படுகின்ற பாட்டில்களிலோ அல்லது Blister Pack-களிலோதான் Stability Studies பரிசோதனை செய்திருப்பார்கள். எனவே மற்ற பெட்டிகளில் அதிக நாட்கள் சேமித்துவைக்கக் கூடாது. சில நாட்கள் வைத்திருக்கலாம். பல வாரங்கள் அல்லது மாதங்கள் வைத்திருப்பது சரியில்லை.
(கட்டுரையாளர்: அன்பு ஜெயா, Pharmaceutical Chemist )
இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவான தகவல் மட்டுமே. அதிக தகவலுக்கும், குறிப்பிட மருந்துபொருட்கள் குறித்த தகவலுக்கும் நீங்கள் Therapeutic Goods Administration ஐ தொட்ரபுகொள்ளுங்கள். TGA-வின் இணைய தளம் www.tga.gov.au TGA தகவல் அறியும் தொலைபேசி இலக்கம்: 1800 020 653 அல்லது 02 6232 8644. மின்னஞ்சல் முகவரிinfo@tga.gov.au
