SKIP TO MAIN CONTENT

குழந்தை வளர்வதற்கு முன்பே முழுநேர வேலைக்குத் திரும்பும் பெற்றோர்: சிட்னியில் அதிகரிப்பு

iStockphoto
Source: iStockphoto

1 min read

Published

Updated


Skip to article content

சிட்னியில் குறைந்தது ஒரு குழந்தையுடைய பெற்றோர்கள் இருவருமே குழந்தை  வளர்வதற்கு முன்னர் முழுநேர வேலைக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சிட்னியில் இவ்வாறான பெற்றோர்களில் கால்வாசிப்பேர் இந்த நிலையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

குழந்தைகள் ஐந்து வயதுக்கு வருவதற்கு முன்னரே தாயும் தகப்பனும் முழுநேர வேலைக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் சிட்னியின் வாழ்க்கைச்செலவினங்கள் அதிகரித்துவருவது இதற்கான காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிட்னியில் இந்தநிலை உச்சத்திலிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிட்னியில் 15 வயதுக்கு உட்பட்ட குறைந்தது ஒரு குழந்தையுடைய குடும்பத்தில் பெற்றோர் இருவரும் முழுநேர வேலைக்கு செல்லுகின்ற விகிதமானது 2009 ஆம் ஆண்டு 24 வீதமாகவும் 2019 ஆம் ஆண்டு 30 வீதமாகவும் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் இந்த அதிகரிப்பு 21 வீதத்திலிருந்து 27 வீதமாக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now